வாசிங்டன், ஏப். 2- பாகிஸ்தான் நாடா ளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த சூழலில், பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு மீது நாளை 3ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பில் பெரும்பான் மையை நிரூபிக்கவில்லை என்றால் இம்ரான்கான் அரசு கவிழும் நிலை உருவாகி உள்ளது.
இந்த சூழலில் அந்நாட்டு மக்க ளிடையே உரையாற்றிய இம்ரான் கான், “நான் 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடியபோது, இந்த உலகமும், என்னுடன் கிரிக் கெட் விளையாடியவர்களும் நான் கடைசி பந்து வரை விளையாடிய நிகழ்வை பார்த்துள்ளனர். என் வாழ்வில் நான் ஒருபோதும் தோல் வியை ஏற்றுக் கொண்டதில்லை. நான் வீட்டில் முடங்கி விடுவேன் என ஒருவரும் நினைத்து விட கூடாது. முடிவு என்னவாயினும், நான் திரும்பவும் வலிமையுடன் வருவேன்
இந்த பேச்சின்போது இம்ரான் கான், வெளிநாடு ஒன்று எங்களுக்கு (பாகிஸ்தான்) செய்தி ஒன்றை அனுப்பியது. அதில், இம்ரான் கான் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். இல்லையெனில், அந் நாடு அதிகம் பாதிக்கப்படும் என தெரிவித்து இருந்தது என்று கூறி னார்.
ஆனால் தொடக்கத்தில் அமெ ரிக்கா என நாட்டின் பெயரை குறிப்பிட்ட இம்ரான் கான் அதன் பின்பு, வெளிநாடு ஒன்று அச்சுறுத் தல் செய்தியை விடுத்தது என்று திருத்தி கூறினார். நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறினால், பாகிஸ்தான் மன்னிக்கப்படும். இல்லையெனில் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அதில் கூறப்பட்டது என அவர் தெரிவித் தார்.
அமெரிக்கா எங்களுக்கு அனுப் பியது என கூறி நிறுத்தி பின்னர், அமெரிக்கா அல்ல, ஒரு வெளிநாடு எங்களுக்கு செய்தி ஒன்றை அனுப் பியது. இதனை பற்றி நான் ஏன் பேசுகிறேன் என்றால்... ஒரு சுதந்திர நாடு இதுபோன்ற செய்தியை பெறு கிறது... இது எனக்கு எதிரானது மற்றும் நாட்டுக்கும் கூட என்று அவர் கூறினார். மேலும் அந்த செய்தி எனக்கு எதிரானது. அர சுக்கு எதிரானது அல்ல என்றும் இம்ரான் கான் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கருத்து குறித்து வெள்ளை மாளிகை தகவல் தொடர்பு இயக்குநர் கேட் பெடிங்பீல்ட் கூறுகையில், “அந்த குற்றச்சாட்டில் முற்றிலும் உண்மை இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment