41 ஆம் ஆண்டு தமிழர் கலை, பண்பாட்டு புரட்சி விழா
அறிஞர் பெருமக்களின் படத்திறப்பு, புரட்சிக்கவிஞர் விருது வழங்கும் விழா
கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கு ‘புரட்சிக்கவிஞர் விருது’ வழங்கி தமிழர் தலைவர் பாராட்டு
சென்னை,ஏப்.30- சென்னை பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா தமிழர் கலை, பண்பாட்டுப் புரட்சி விழாவாக 41ஆம் ஆண்டு விழா நேற்று (29.4.2022) காலை சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் பகுத்தறி வாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச் செல்வன் தலைமையில் நடைபெற்றது.
பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன் வரவேற்றார். பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வி.மோகன், பொரு ளாளர் முனைவர் சி.தமிழ்ச்செல்வன், பகுத்தறி வாளர் கழக தென்சென்னை மாவட்ட தலைவர் மு.ர.மாணிக்கம், பகுத்தறிவாளர் கழக வட சென்னை மாவட்டத் தலைவர் கோவி.கோபால், திராவிடர் கழக வடசென்னை மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன், திராவிடர் கழக தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
படத்திறப்பு
நூற்றாண்டு நாயகர் பெரியார் பேருரையாளர் பெரும்புலவர் ந.இராமநாதன் படத்தை பகுத்தறி வாளர் கழக புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார்.
பேராசிரியர் முனைவர் ஏ.ஆர்.வெங்கடா சலபதி ‘முகம்’ மாமணி படத்தையும், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தமிழ்நாடு அரசின் ‘திருவள்ளுவர் விருது’ பெற்ற பெங்களூரு முத்துச்செல்வன் படத்தையும் திறந்து வைத்து உரையாற்றினார்கள்.
நூல் வெளியீடு
புரட்சிக்கவிஞரின் உலகுக்கோர் அய்ந் தொழுக்கம் (குயில் ஏட்டில் வெளியான தலை யங்கக் கட்டுரைகள்) நன்கொடை ரூ.280, பெரியாரியல் பாடங்கள் தொகுதி 3 (பெரியார் பேருரையாளர் பேராசிரியர் ந.இராமநாதன்) நன்கொடை ரூ.280, பாரதிதாசனும் நகரத் தூதனும் - டாக்டர் ச.சு.இளங்கோ நன்கொடை ரூ.60 மொத்த நன்கொடை ரூ. 620. புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழாவில் ரூ.120 சலுகை அளிக்கப் பட்டு ரூ.500க்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
தமிழர் தலைவரிடமிருந்து ஏராளமானவர்கள் புத்தகங்களை வரிசையில் நின்று பெற்றுக் கொண்டனர்.
புலவர் ந.இராமநாதன், 'முகம்' மாமணி, பெங்களூரு முத்துச்செல்வன் ஆகியோரின் குடும்பத்தினர் தமிழர் தலைவரிடம் நன்கொடை வழங்கி தங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
புரட்சிக்கவிஞர் விருது
விழாவில் பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உயிர்மை இதழாசிரியர் கவிஞர் மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கு ‘புரட்சிக்கவிஞர் விருது’ அளித்து சிறப்பு செய்தார்.
சிறப்புரை
திராவிட இயக்க தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சிறப்புரை ஆற்றினார். விருது பெற்ற கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஏற்புரை ஆற்றினார்.
பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்பு விருந்தினர் களுக்கு இயக்க வெளியீடுகளை வழங்கி பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விழா நிறைவுப் பேருரை ஆற்றினார்.
விழா முடிவில் வேண்மாள் நன்னன் நன்றியுரை ஆற்றினார்.
திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார்.
விழாவில் காங்கிரசு கட்சி மேனாள் சட்டமன்ற உறுப்பினர் உ.பலராமன், அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், துணைப்பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, மோகனா வீரமணி, மருத்துவர் மீனாம்பாள், வழக்குரைஞர்
ஆ.வீரமர்த்தினி, சி.வெற்றி செல்வி, புலவர் பா.வீரமணி, மஞ்சை வசந்தன், கவிச்சிங்கம் கண்மதியன், த.கு.திவா கரன், மயிலாடுதுறை கழக மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ், சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, சோழிங்கநல்லூர் மாவட்டச் செய லாளர் விடுதலைநகர் ஜெயராமன், ஆவடி மாவட்டச் செயலாளர்
க.இளவரசன், பெரியார் மாணாக்கன் பூவை செல்வி உள்பட ஏராள மானோர் கலந்து கொண் டனர்.
No comments:
Post a Comment