கொழும்பு, ஏப். 2- இலங்கை அதிபர் இல்லம் அருகே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும்பதற்றம் ஏற்பட் டது. போராட்டக்காரர் கள் அதிபர் இல்லத்துக் குள் நுழையலாம் என்ற சூழல் உண்டானது. காவல்துறையினர் துணை ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினாலும் போராட்டக்காரர்கள் முன்னேறி செல்ல முயன் றபடி இருந்தனர்.
இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டு முன்பு ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். மக் கள் போராட்டம் கார ணமாக அதிபர் கோத் தபய ராஜபக்சே அவரது வீட்டில் இருந்து அழைத்து செல்லப்பட்டு ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டதாக தக வல் வெளியாகி உள்ளது.
கோத்தபய ராஜபக்சே வுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் ரகசிய இடத்துக்கு கொண்டு செல்லப்பட் டார். போராட்டம் கார ணமாக பிரதமர் மகிந்த ராஜபக்சே, அமைச்சர் களின் வீடுகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment