31 ஆண்டுகள் சிறையில் இருக்கும் பேரறிவாளன் பிரச்சினை
ஆளுநர் நடவடிக்கைகள் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானவை
பேரறிவாளனை விடுவிக்கும் முடிவை ஏன் நாமே எடுக்கக்கூடாது? - உச்சநீதிமன்றம் கேள்வி
தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய கேள்விகள்
பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலைப் பிரச்சினை குறித்து உச்சநீதிமன்றம் கூறிய கருத் துகளின் அடிப்படையில், ஆளுநர் உச்சநீதிமன்ற அவமதிப்பு, தமிழ்நாடு சட்டமன்ற அவமதிப்பு வேலைகளில் ஈடுபடக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு.
நீண்ட காலமாக தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவு என்ற தகுதியுடன் உள்ள தமிழ்நாடு அரசின் அமைச் சரவை முடிவான பேரறிவாளன் உள்பட எழுவர் விடுதலை சம்பந்தமானப் பிரச்சினையில் ஒரு பெரும் சட்டப் போராட்டமே நடந்து வருகிறது! நேற்று (27.4.2022) உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்துள்ளது.
மசோதாக்களை மட்டுமே ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் அதிகாரம் மாநில அரசின் பரிந்துரைகளையல்ல!
‘‘தமிழ்நாடு அமைச்சரவையின் பரிந்துரையை குடி யரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாக உள்துறை அமைச்சக அறிக்கை தெரிவிக்கிறது. இதுபற்றி பேரறிவாளனின் 31 ஆண்டுகால சிறை வாழ்க்கை முன் னுதாரணமாக இருந்து வருகிறது. அவரை விடுவிப்ப தற்குப் பொருத்தமான வழக்கு இது'' என பேரறிவாளன் சார்பில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் கோபால் சங்கரநாராயணன் கூறியுள்ளார்!
அப்போது குறுக்கிட்ட (உச்சநீதிமன்ற) நீதிபதிகள் ‘‘பேரறிவாளனை விடுவிக்கும் முடிவை ஏன் நாம் எடுக்கக் கூடாது? ஏன் குழப்பத்தில் ஆழ்ந்திருக்க வேண்டும்?'' என்று தமிழ்நாடு அரசுக்குக் கேள்வி எழுப்பினர்.
தமிழ்நாடு அரசின் சார்பில் வாதாடிய மூத்த வழக் குரைஞர் ராகேஷ் திவேதி, ‘‘மசோதாக்களை மட்டுமே குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. மற்றபடி அமைச்சரவையின் பரிந் துரையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் கேள்வியே எழவில்லை'' என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
அதைத் தொடர்ந்து நீதிபதிகள், ‘‘இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதா? ஒன்றிய அரசுக்கு உள்ளதா? என்ற முரண்பாட்டுக்குள் செல்லாமல், உச்சநீதிமன்றமே ஏன் முடிவு எடுக்கக் கூடாது?
குடியரசுத் தலைவர் என்ன முடிவு எடுக்க வேண்டியுள்ளது!
எந்த சட்ட விதிகளின்படி ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்?
31 ஆண்டுகள் சிறையில் உள்ள நபரை வேறு நபரோடு ஒப்பிடுகிறீர்களே, இந்த விவகாரத்தில் குடி யரசுத் தலைவர் என்ன முடிவு எடுக்கவேண்டியுள்ளது?'' என ஒன்றிய (மத்திய) அரசிடம் கேட்டனர்.
அதற்கு ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நடராஜ், ‘‘அரசமைப்புச் சட்டம் 72 ஆவது பிரிவின்கீழ் தண்டனையைக் குறைக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவர் பெற்றுள்ளார். ஆளுநருக்கு அதிகாரம் இல்லாத விவகாரத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதைத் தவிர வேறு வழியில்லை'' என்று வாதிட்டார்.
கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது?
அப்போது நீதிபதிகள், ‘‘மகிழ்வு தராத அமைச்சர வையின் ஒவ்வொரு முடிவையும் குடியரசுத் தலை வருக்குப் பரிந்துரைத்தால், கூட்டாட்சிக்கு எதிரானதான தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்'' என கருத்துக் கூறினர்.
அப்போது பேரறிவாளன் சார்பில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் கோபால் சங்கரநாராயணன், ‘‘ஒன்றிய அரசின் வாதத்தை ஏற்றால், குற்ற வழக்குகளில் தண் டனை அனைத்தையும், ஒன்றிய (மத்திய) அரசுதான் முடிவு செய்ய வேண்டிவரும். முடிவெடுப்பதில் பேர வைத் தலைவருக்கு இருக்கும் காலக் கெடுவைப் போல, ஆளுநருக்கும் இருக்கவேண்டும்'' என வாதிட்டார்.
ஒன்றிய அரசின் முடிவுகள் -
அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானவை!
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் ''அடுத்தடுத்து விசாரணை ஒத்தி வைக்கப்பட்டு 3 ஆண்டுகள் கழித்து ஒன்றிய அரசு தன் நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது.
ஒன்றிய (மத்திய) அரசின் வாதங்கள் அரசியல் சாசன அமர்வு தீர்ப்புக்கு எதிராக உள்ளன. பரிந்துரை என்பது மாநில அரசின் முடிவே தவிர, ஆளுநரின் முடிவு அல்ல. அமைச்சரவை முடிவுக்கு எதிராக தனிப்பட்ட முறையில் ஆளுநர் செயலாற்ற முடியாது. அமைச்சரவை முடிவுக்குக் கட்டுப்பட்டவர் ஆளுநர்'' என்று கூறி, விசாரணையை தள்ளி வைத்தனர்.
இந்த அருமையான அரசமைப்புச் சட்ட விதிப்படி, ஆளுநர், அமைச்சரவை முடிவுக்கு மாறாக இழுத்தடிப் பதோ, காலதாமதம் செய்வதோ, அரசமைப்புச் சட்டப்படி அவர் ஆற்றவேண்டிய கடமையைச் செய்யத் தவறிய வராவார் என்பதே - குறிப்பிட்ட இந்த வழக்கில் கூறப் பட்டுள்ளது. இதன் தத்துவமும், சட்ட விளக்கமும் 'நீட்' தேர்வு விலக்கு மசோதா உள்பட அனுப்பாமல் தேக்கி வைக்கும் ஆளுநரின் நிலைப்பாட்டுக்கு எதிரான எச் சரிக்கை மணி என்பதை அவரும், அவருக்கு ஆலோ சனை கூறும் எவரும் உணரவேண்டிய சுவரெழுத்து - இந்த மேற்காட்டிய சட்ட விளக்கம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்!
ஆளுநர் முரட்டுப் பிடிவாதம் காட்டுவதா?
மேலும், ஆளுநர் வறட்டுப் பிடிவாதம் காட்டுவதோ, குறுக்குசால் ஓட்டுவதோ இரண்டு அவமதிப்புகள் ஆகும்.
1. உச்சநீதிமன்ற அவமதிப்பு
2. தமிழ்நாடு சட்டமன்ற அவமதிப்பு
தேவையா இந்த வீண் குழப்பம்?
எனவே, ஆளுநரே, தாங்கள் ''அரசியல் செய்யாதீர்கள்!'' ‘‘அவப்பெயர் வாங்காதீர்!'' அனுப்புங்கள் விரைவில்!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
28.4.2022
No comments:
Post a Comment