தமிழ் அர்ச்சனைக்குக் குரல் கொடுத்த திராவிடர் கழகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 2, 2022

தமிழ் அர்ச்சனைக்குக் குரல் கொடுத்த திராவிடர் கழகம்

 முனைவர் பேராசிரியர் ..மங்கள முருகேசன்

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு..ஸ்டாலினின் தமிழ்நாடு அரசு, திரா விடர் கழகம் அதற்கு முன்னர் சுயமரியாதை இயக்கம் ஆகிய தந்தை பெரியாரின் தன் மான இயக்கம் நிறைவேற்றிச் செயலாக்கம் கோரிய தீர்மானங்களை நடைமுறைக்குக் கொண்டுவருவதில் அனைவரின் பாராட்டு களையும் பெற்று வருகிறது.

தமிழ்நாட்டுத் திருக்கோயில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் தலைவர் கலைஞர் ஆட்சியில் நிறைவேறியது. அதுமட்டுமல்லாமல் உச்ச நீதிமன்றம் வரைச்சென்று ஆதிக்கச் சக்தி களின் தடையையும் வென்றெடுத்துத் தகர்த்தது. ஆனால் என்ன? பத்து ஆண்டு கள் பா... அடிமை ஆட்சி அதைக் கிடப்பில் போட்டது. முறையான பயிற்சி பெற்றோர், ஆலயங்களில் வழிபாடு செய் யத் தகுதி பெற்றோர் என்று தலைவர் கலை ஞர், “தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றி விட்டோம்என்று பெருமை கொண்ட நியாயமான செயல் - முறையற்ற வகையில் கிடப்பில் போடப் பட்டிருந்தது - 2022இல் நடைமுறைக்கு வந்தது தளபதி மு..ஸ்டாலின் ஆட்சியில்!

இந்த வரிசையில் மகளிர் நாளில் தலை வர் மு..ஸ்டாலின் அரசு இந்தியாவிலேயே எந்த அரசும் பெண்டிருக்குச் செய்திடாத சாதனையாகஇனிமேல் வீட்டுவசதி வாரிய இல்லங்கள் மகளிர் பெயரிலேயே பதிவு செய்யப்படும்’’ எனும் புரட்சி அறி விப்பை வெளியிட்டது.

இதுவும்கூட பெண்டிருக்குச் சொத் துரிமை வேண்டும் எனச்சுயமரியாதை இயக்கச் செங்கல்பட்டு முதல் மாகாண மாநாட்டில் 1929இல் நிறைவேற்றிய தீர் மானத்தின் செயலாக்கம் தான். தலைவர் கலைஞர் தம் ஆட்சியில் குடும்பச் சொத் தில் பெண்டிருக்கு உரிமை உண்டு என நிறைவேற்றிய சட்டத்தின் தொடர்ச்சிதான். 93 ஆண்டுகளுக்கு முன் நிறைவேறிய தீர்மானம் தகப்பன், பாட்டன் காலம் கடந்து இன்று பெயரன் காலத்தில் நிறைவேறியிருக் கிறது.

இதைப்போலவே 66 ஆண்டுகளுக்கு முன்னம் 1956இல்  ஆலயங்களில் சேக் கிழார் பெருமான் தம் பெரியபுராணத்தில்அர்ச்சனைஎன்பதுதமிழ்ப் பாட்டேஎன எடுத்துக் கூறியதற்கும் மாறாக சமஸ்கிரு தத்தில் ஆலயங்களில் அர்ச்சனை நடை முறை வந்தது.

24.12.1956 ஆம் ஆண்டுவிடுதலை’ ‘தமிழருக்கு அவமானமாயில்லையா?’ என்று ஆலயங்களில் அர்ச்சனை தமிழில் நடைபெற வேண்டும் என்பதற்காகத் தலை யங்கமே தீட்டியது என்றால் கேட்பவருக்கு வியப்பாக இருக்கும். நாத்திக இயக்கத்திற்கு ஆலயங்களில் எந்த மொழியில் அர்ச்சனை நடைபெற்றால் என்ன கவலை? என்றுகூட எண்ணக்கூடும்.

இன்று எங்கு பார்த்தாலும் தமிழ் இசை என்றும், தமிழில் கல்வி போதனை என்றும் பேசப்படுகிறது. தமிழ் வளர்ச்சிக்காகவே தனிக்கட்சி வைத்திருப்பவர்களும், இந்தப் பெயராலேயே தனித் தலைவர்களாக இருந்து வருபவர்களும் தமிழையே தனி யாகப் பயின்று கல்விக்கூடங்களில் தமி ழாசிரியர்களும் ஏராளமாய் உண்டு.

ஆனால் தமிழில் கோயிலில் ஆரிய மொழியில் - அன்னிய மொழியில் - எதற் காக வழிபாடுகள் நடக்க வேண்டும். அப் பேர்பட்ட கோயிலுக்கு தமிழன் செல்ல லாமா? என்பதைப்பற்றி இவர்களில் எவ ருக்காவது கவலை இருக்கிறதா?” என்று தொடங்கி வினா எழுப்பியது,

அடுத்துஇதைக் கேட்டால்உங்களுக் குத்தான் கோயிலில் நம்பிக்கை இல்லையே! எந்த மொழியில் அர்ச்சனை நடந்தால் என்ன? கடவுளுக்கு தெரியாத மொழி கூட உண்டா?” என்று கேட்கிறார்கள் சிலர்.

அன்று மட்டுமா? இன்றும் கூட அனைத்துப் பிரிவினரும் அர்ச்சகராக வேண்டும் என்று குரல் எழுப்பியதற்கும் இன்னும் சில மேதாவிகள் கேட்டதுண்டு.

எனவே அதற்கும் அத்தலையங்கத்தில் பெரியார் அய்யா அன்றே பதில் கூறிச் சிந்திக்க வைத்தார். சரியான பதில் - விடை கொடுத்தார் - அவ்வினாக்களுக்கு அய்யா வின் பதில் என்ன? இதுதான் பதில் என் பதைவிடச் சரியாகக் கொடுத்த மட்டை யடியாகும்.

அப்படியானால் இங்கிலீஷ்காரரைக் கொண்டு இங்கிலீஷில் அர்ச்சனை செய் யச் சொல்வது தானே.

வீடில்லாத மக்களுக்கு வீடு வேண்டும்என்று ஒருவன் கூறினால்உனக்குத் தான் வீடு இருக்கிறதே! மற்றவன் எக்கேடு கேட்டால் உனக்கு என்ன?” என்று கேட்பது அறிவுடைமையாகுமா?

உரிமை என்பது எல்லோருக்கும் பொது, அவனவன் சொந்த உரிமைக்காக மட்டுமே போராடுவது வடிகட்டிய சுய நலமாகும். ஒரு  கிராமத்தில் உள்ள பொதுக் குளத்தில் எல்லோரும் குளிப்பதற்கு உரிமை இருக்க வேண்டும் என்று வெளி யூர்க்காரர்களும் சேர்ந்து போராட்டம் நடத்தினால், “வெளியூர்காரர்களுக்கு இங் கென்ன வேலை? நீங்களா இக்குளத்தில் குளிக்கப் போகிறீர்கள்?” என்று கேட் கலாமா?”

இப்படி அன்னைத் தமிழில் அர்ச்சனை வேண்டும் என்று கேட்க கருப்புச் சட்டைக்காரர் களான கழகத்தவர்களுக்கு உரிமை உண்டு என வலியுறுத்தியவர் தந்தை பெரியார்.

மேலும் அவர் கருப்புச் சட்டைக்காரர் இப்பிரச்சினையில் தலையிட உரிமை உண்டு என அன்று வலியுறுத்தியது. அதா வது 66 ஆண்டுகளுக்கு முன் வலியுறுத் தியது இன்றும் பொருந்துகிறது. நாளையும் பொருந்தும் என்பதுதான் சிறப்பு.

கருஞ்சட்டைக்காரருக்குப் பெரியார் பெரும் படையினருக்குச் சிலை வணக்கத் தில் நம்பிக்கை இல்லை என்பது உண்மை தான்.  ஆனால் கருஞ்சட்டைக்காரனும் தமிழன் தானே? தமிழன் கோயிலில் ஆரியனின் ஆதிக்கம் இருப்பதை எப்படிச் சகித்துக் கொள்ள முடியும்? தமிழர்களுக்கு தன்மான உணர்ச்சி வராதா என்று கடந்த 30 ஆண்டு காலமாக எதிர்பார்த்தோம், வரக் காணோமே? இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குப் பொறுத்துக் கொண்டி ருப்பது? மற்றத் துறைகளில் அன்னிய மொழி ஆதிக்கம் கூடாது என்னும்போது கோவிலுக்குள்ளே மாத்திரம் அன்னிய மொழி இருக்கலாமா? இதைக் கேட்பதற்கு மற்றத் தலைவர்களுக்கு நெஞ்சத் துணிவு வராமல் இருப்பது ஏன்?” என்று தந்தை பெரியார் கேட்டார்.

திராவிடர் கழகம் தமிழ் அர்ச்சனைக் காகத் தலையங்கம் தீட்டுவதோடு நின்று விட்டதா? இல்லை அதற்காகக் கிளர்ச் சிக்கும் திட்டமிட்டது என்பதை வரலாறு காட்டுகிறது.

அதே ஆண்டு 1956லேயே நவம்பர் மாதம் தஞ்சை மாவட்ட திராவிடர் கழக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றிவிரை வில் தமிழில் அர்ச்சனை கிளர்ச்சி துவங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

சேலம் அல்லது தஞ்சை மாவட்டத்தில் இரண்டு அல்லது மூன்று இடங்களைத் தெரிவு செய்யக்கூடும்என அறிவித்த கையோடு குறிப்பிட்ட இச்செய்தி தனித்தன்மையி லானது படிக்கவே வியப்பாக இருக்கிறது.

இக்கிளர்ச்சியில் பெண்களே மிகுதி யாக பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்பது நம் ஆசை. இக்கிளர்ச்சியில் மத சின்னங்களுடன் வழிபாட்டை முன்னிட்டு செய்பவர்களுக்குத் தான் முதல் உரிமை கொடுக்கப்படும், இது செய்யப்படாத வரையில் தமிழர்கள் வழிபாடு செய்வ தற்காக வேண்டிகோயில்கர்ப்பகிரகம்என்று சொல்லப்படுகின்ற மூல இடத் துக்குள் செல்வார்கள் என்று தெரிவித்து கொள்கிறோம்என்று எச்சரிக்கையும் - “இக்கிளர்ச்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள் பெருவாரியாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். எம்.எல்.ஏக் கள், எம்.எல்.சிக்கள் ஆகியோரும் தங்கள் பெயர்களைக் கொடுக்கலாம்எனும் அறிவிப்பும் இடம்பெற்றிருந்தது.

தலையங்கம் முடிவில்

தன்மான தமிழர்களே! கோயில்களில் இருந்தும் ஆரிய ஆதிக்கத்தை விரட்டி அடிப்பதற்கு முந்துங்கள்! வெற்றி நமக்குத் தான். அய்யமில்லை, பெயர் பட்டியல் வந்து குவியட்டும்

1956 இன் நிலை இது. இதில் வேண்டு கோள்கள், அறிவிப்புகள் - எச்சரிக்கை ஆகியன இடம்பெற்றிருந்தன.

No comments:

Post a Comment