இடி, மின்னல் வந்தபின் வரும் மழையை கண்டு எப்படி ஓர் விவசாயி மகிழ்வாரோ அதைப் போல நான் 21-04-2022 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஓமலூர் வருகையின் போது மகிழ்ந்தேன்.
ஓமலூரில் தேர்தல் சமயத்தில் அகற்றப் பட்ட கழக கொடிக் கம்பத்தை ஏற்ற காவல் துறை அனுமதி மறுத்த நிலையில், ஏற்கெனவே நாங்கள் கொடி ஏற்றிய இடத்தில் தான் ஏற்றுகிறோம் என்ற தக்க ஒளிப்பட ஆதாரத்தோடு கழகத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் காண்பித்து, அனுமதி பெற்று, 21-04-2022 அன்று கொடியோடு, நீட் எதிர்ப்பு பிரச்சார பெரும் பயண நினைவு கல்வெட்டும் அமைத்து ஆசிரியர் அய்யா அவர்களால் கொடி ஏற்றியதும், கல்வெட்டு திறந்ததும் மிகவும் மகிழ்ச்சிக்கும், நெகிழ்ச்சிக்கும் உரியது.
காற்றிழுக்க பழகியதால் தான் உயிர் வாழ்க்கை - காத்திருக்க பழகினால்தான் உயர் வாழ்க்கை என்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வாழ்வியல் தத்துவத்தை அனுபவித்து மகிழ்ந்தேன். அதைப் போலவே நிகழ்வு முடிந்து ஆசிரியர் அவர்கள் வேனில் ஏறும் போது நன்றி அய்யா என்று சொன்னவுடன் காரில் ஏறி திரும்பிப் பார்த்து என்னய்யா இன்றைக்கு லாரிக்கு போகவில்லையா? என்று கேட்டபோது சிறிது நேரம் என்னை மறந்தேன்.(நான் ஒரு லாரி ஓட்டுநர்)
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை "குடும்பத் தலைவர்" என்று நாம் அழைப்பது எவ்வளவு பொருத்தம் என்று உணர்ந்தேன்.
25 ஆண்டு கால எனது சிறிய கழக உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் பெற்று மகிழ்ந்தேன்.
ஓமலூர் பெ.சவுந்திரராசன்
No comments:
Post a Comment