மூடநம்பிக்கையால் விளைந்த கேடு! பூஜை போடும் போது வெடித்துச் சிதறிய புது வாகனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 4, 2022

மூடநம்பிக்கையால் விளைந்த கேடு! பூஜை போடும் போது வெடித்துச் சிதறிய புது வாகனம்

சித்தூர், ஏப் 4 - புதிய இருசக்கர வாகனத் திற்கு பூஜை செய்து கொண்டிருந்த போது திடீரென்று தீப்பிடித்து எரிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம், குண்டகல்லுவில் அருகே உள்ள கசாபுரம் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்கு, மைசூரை சேர்ந்த ரவிச்சந்திரா என்பவர் யுகாதி பண்டி கையை முன்னிட்டு இந்த கோயிலுக்கு தனது புதிய இருசக்கரவாகனத்தில் சென்றுள்ளார்.   குண்டக்கல்லில் உள்ள கசாபுரத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் புதிதாக வாங்கப்பட்ட வாகனத்திற்கு பூஜை செய்யப்பட்டது. அப்போது திடீரென்று தீப்பிடித்த நிலையில், தீயை அணைக்க முற்பட்ட போது அது வெடித்து சிதறியது. 

இதனால் அதிர்ச்சியடைந்த ரவிச் சந்திரா செய்வதறியாமல் திகைத்து நின்றார். இருசக்கரவாகனம் எரிந்து கொண்டிருப்பதை கண்ட பொது மக்கள் யாரும் கிட்ட நெருங்கவில்லை. இந்நிலையில், சற்றும் எதிர்பாக்காத நொடியில் வண்டியின் பெட்ரோல் டேங்க் வெடித்து மின்னல் வேகத்தில் காற்றில் பறந்தது. தீயும் கிளம்பியதால் சம்பவத்தை படம் எடுத்துக் கொண் டிருந்தவர்களும் அங்கிருந்து ஓடினர்.

சிலர் தண்ணீர் ஊற்றியதால் தீ வேறெங்கும் பரவாமல் விபத்து தவிர்க் கப்பட்டது. விபத்துநடந்த இடத்திற்கு வந்த காவலர்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீ விபத்து ஏற் பட்டதா? அல்லது நீண்ட நேரம் நிற்கா மல் ஓட்டி வந்ததால் வாகனம் தீ பிடித்து வெடித்ததா என்று விசாரித்து வருகின் றனர்.  

மேலும், வெகு தூரம் வண்டியை ஓட்டி செல்பவர்கள் வழி யில் சிறிது நேரம் நிறுத்திவிட்டு பிறகு  செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது தென் இந்தியாவின் மேல் பகுதியில் வெப்பம் கொதிநிலையைத் தொட்டுள்ளது, நீண்ட தூரம்வண்டி ஓட்டியதால் சூடாகி பெட்ரோல் டாக்கின் மூடிப்பகுதியில் வாயு வெளி யேறி உள்ளது, இந்த நிலையில் புது இருசக்கரவாகனத்திற்கு பூஜை செய்ய கற்பூரம் காட்டி உள்ளனர்.  அப்போது வெளியேறிய வாயு தீப்பற்றிவிட ஏற்கெ னவே கொதிநிலையில் இருந்த பெட் ரோல் எளிதில் தீப்பற்றி வெடித்துச் சிதறியுள்ளது.


No comments:

Post a Comment