தாம்பரம் புத்தக நிலையத்துக்கு நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 7, 2022

தாம்பரம் புத்தக நிலையத்துக்கு நன்கொடை

தாம்பரம் அண்ணா பேருந்து நிலையம், அண்ணல் அம்பேத்கர் சிலை அருகில் அமைந்துள்ள பெரியார் பகுத்தறிவு புத்தக கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்திற்கு  (5.4.2022) விடுதலை அச்சக மேலாளர் 

க.சரவணனின் சகோதரர் சிங்கப்பூர் க.பூபாலன் வருகை தந்து சிறப்பித்தார். தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன்  வரவேற்று சால்வை அணிவித்தார். தோழர் பூபாலன் இயக்க புத்தகங்கள் வாங்கியதுடன் தாம்பரம் புத்தக நிலைய வளர்ச்சிக்கு 1000 ரூபாய் நன்கொடை வழங்கினார். தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ் மற்றும் சிவகங்கை மா.சந்திரன் அய்யா ஆகியோர் உடனிருந்தனர்.


No comments:

Post a Comment