தமிழ்நாட்டின் உரிமைக்காகத்தான் டில்லி சென்றேன் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 4, 2022

தமிழ்நாட்டின் உரிமைக்காகத்தான் டில்லி சென்றேன் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை , ஏப்.4- தமிழ்நாட்டின் உரிமைக்காகத்தான் டில்லி சென்றேன் என்று  திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

திருமண விழா 

தமிழ்நாடு கட்டுமானத்தொழிலா ளர் நல வாரியத்தின் தலைவர் பொன் குமார் - மைதிலி இணையர்களின் மகன் வினோத்குமார், சென்னை வேளச் சேரியை சேர்ந்த டெல்லிபாபு-சுமதி இணை யர்களின் மகள் ரேவதி ஆகியோரின் திருமணம் சென்னை திருவான்மியூரில் நேற்று  (3.4.2022) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு திரும ணத்தை தலைமை தாங்கி நடத்திவைத் தார். விழாவில் அவர் பேசியதாவது:

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எடுத்துச்சொல்லி இருக்கும், "வீட்டிற்கு விளக்காய் - நாட்டிற்கு தொண்டர்களாய்" இருந்து உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் கேட் டுக்கொள்கிறேன். இங்கு சிலர் பேசுகிற போது குறிப்பிட்டு சொன்னார் கள். நான் அண்மையில் துபாய்க்கு சென் றிருந்த நேரத்தில், ஏதோ பலகோடி ரூபாயை எடுத்துக் கொண்டு சென்றதாக மேனாள் முதலமைச்ச ரும், இன்றைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழ னிசாமி பேசிய செய்திகளை யெல்லாம் நாம் பார்த்தோம். அதற்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கே எனக்கு முன்னால் பேசியவர்களே அதற்குரிய விளக்கத்தை தந்திருக்கிறார்கள்.

டில்லி பயணம் ஏன்? 

அதையடுத்து அண்மையில் 3 நாட்கள் இந்தியாவின் தலைநகரமான டில்லிக்கு பயணம் சென்று நம்முடைய மாநிலத்தின் பிரச்சினைகளை எல்லாம் பிரதமர் இடத்தில் - அதற்குரிய அமைச் சர்களிடத்தில் அந்த கோரிக்கைகளை எல்லாம் எடுத்துவைத்து உரிமைக்கு குரல் கொடுத்து வந்திருக்கிறோம்.

அதையெல்லாம் மூடி மறைக்க, அதை தாங்கிக் கொள்ள முடியாதசிலர் என்ன சொன்னார்கள் என்றால், ஏதோ அச்சத்தின் காரணமாக, பயத்தின் காரணமாக சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிற என்னை அதில் இருந்து காப்பாற்றி கொள்வதற்காக போனேன் என்று சொல்கிறார்கள். ஒன்று மட்டும் உறுதியாக சொல்கிறேன். 

தமிழ்நாட்டுக்காக உழைப்பேன்

அங்கு சென்று யாருடைய காலிலும் விழுந்து, இதை எனக்கு செய்து தாருங்கள் என்று கேட்கவில்லை. தமிழ் நாட்டின் உரிமைக்காகத்தான் நான் போனேனே தவிர, வேறு அல்ல. ஏனென்றால் நான் சாதாரண ஸ்டாலின் அல்ல, பதவியேற்றபோதே நான் சொன்னேன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்' என்று தான் சொல்லியிருக்கிறேன். நான் கலைஞர் கருணாநிதியினுடைய மகன். என்றைக்கும் தமிழ்நாட்டுக்காக உழைப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment