‘பேரழிவை தவிர்த்துக்கொள்ளுங்கள்’ - தென் கொரியாவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 5, 2022

‘பேரழிவை தவிர்த்துக்கொள்ளுங்கள்’ - தென் கொரியாவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை

பியாங்யாங், ஏப். 5- வடகொரியா கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. ஆனாலும் கூட, உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் பொருட் படுத்தாமல், அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களையும் புறந்தள்ளிவிட்டு தொடர்ந்து ஏவுகணைகளை சோதித்து வரு கிறது. இதனால் அய்.நா. பாது காப்பு கவுன்சிலும், அமெரிக்கா வும் அந்த நாட்டின் மீது கடுமை யான பொருளாதார தடைகளை விதித்துள்ளபோதும், அது தனது  ணீ சோதனைகளை நிறுத்தவில்லை.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அந்த நாடு ‘அய்.சி.பி.எம்.’ என அழைக் கப்படுகிற கண்டம் விட்டு கண் டம் பாய்கிற வல்லமை கொண்ட ஏவுகணையை சோதித்து அண்டை நாடுகளையும், அமெரிக்க வல்லரசையும் அதிர வைத்தது. 4 ஆண்டுகளுக்கு பிறகு இத்த கைய சோதனையை இப்போது தான் வடகொரியா நடத்தி உள் ளது.

இந்த நிலையில் சமீபத்தில் தென்கொரியாவில் உள்ள ஏவு கணை செலுத்தும் மய்யத்துக்கு அந்த நாட்டின் ராணுவ அமைச் சர் சூ ஊக் சென்றபோது வட கொரியாவின் ஏவுகணை சோத னையை காட்டமாக விமர்சித் தார். அப்போது அவர், “தென் கொரியா மீது வடகொரியா ஏவுகணைகளை ஏவுவதற்கு திட்டம் எதுவும் வைத்திருந்தால், அந்த நாட்டின் மீது துல்லிய மான தாக்குதல்களை நடத்துவ தற்கான திறனும், தயார் நிலையும் தென் கொரியாவுக்கு இருக்கிறது” என்று கூறினார்.

இந்த வார்த்தைகள் வடகொ ரியாவை அதிரவைத்துள்ளது. குறிப்பாக, வடகொரியா தலை வர் கிம் ஜாங் அன்னின் சகோதரி கிம் யோ ஜாங் தென் கொரி யாவை கடுமையாக எச்சரித்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- அணு ஆயுதம் வைத்துள்ள ஒரு நாட்டைப்பார்த்து, அழுக்கு நுரை போன்ற ஒருவர் முன் எச்சரிக்கை விடுப்பது விவேகம் இல்லாதது ஆகும். தென்கொ ரியா அதன் ராணுவ அமைச்சரின் பொறுப்பற்ற கருத்துகளுக்கு எதிராக ஒரு தீவிர அச்சுறுத்தலை எதிர்கொள்ள நேரிடும். பேர ழிவை தவிர்க்க வேண்டும் என்று விரும்பினால் தென் கொரியா தன்னை ஒழுங்குபடுத்த வேண் டும் என்று அவர் கூறினார்.

வட கொரிய ஆளும் கட்சி யான தொழிலாளர் கட்சியில் இந்த கிம் யோ ஜாங்தான் தென் கொரியா மற்றும் அமெரிக்கா தொடர்பான விடயங்களில் பொறுப்பு அதிகார மய்யம் ஆவார். இவர்தான் வடகொரி யாவில் தலைவர் கிம் ஜாங் அன்னிற்கு அடுத்த 2ஆம் இடம் வகிக்கிறார் என்று தென் கொரி யாவின் உளவு அமைப்பு கூறு கிறது.

கிம் யோ ஜாங்கைப் போன்று தொழிலாளர் கட்சியின் செய லாளர் பாக் ஜாங் சோனும் தென் கொரியாவை எச்சரித்துள்ளார்.

இதையொட்டி அவர் கூறும் போது, “ வடகொரியாவை தென் கொரியா முதலில் தாக்கினால், சியோல் மற்றும் தென்கொரிய ராணுவத்தின் முக்கிய இலக் குகளை அழிப்பதற்கு ராணுவ சக்தியை கருணையின்றி வட கொரியா கட்டளையிடும் ” என எச்சரித்தார். இந்த பிரச்சினை யால் கொரிய தீபகற்ப பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment