டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
தெலங்கானா தாழ்த்தப்பட்ட சமூக மக்களில் உள் ஒதுக்கீட்டுக்கு சட்டத் திருத்தம் கோரி நாடாளுமன்ற இரு அவைகளில் இருந்தும் டி.ஆர்.எஸ். உறுப்பினர்கள் வெளிநடப்பு.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
உள் ஒதுக்கீடு அளித்திட நியாயமான காரணங்கள் தேவை என்று கூறி உச்ச நீதிமன்றம் வன்னியர் களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டு தடையை உறுதி செய்தது.
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான நிதி குறைக்கப்பட்டதற்கு சோனியா காந்தி கண்டனம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கிட ஆணையம் அமைத்து முடிவு எடுக்கப்படும் என கருநாடக அரசு அறிவிப்பு.
தி டெலிகிராப்:
சிறுபான்மையினர் மீது வெறுப்புப் பிரச்சாரம் தொடர அனுமதிக்கப்பட்டால், தகவல் தொழில்நுட்பத்தில் அதன் “உலகளாவிய தலைமையை” கருநாடகா இழக்க நேரிடும் என்று தொழிலதிபர் கிரண் மசூம்தார்-ஷா எச்சரித்துள்ளார்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment