சென்னை,ஏப்.4- கரோனா வைரஸ் கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் 7-ஆம் தேதி தமிழ்நாட்டில் கால் பதித்தது. இதையடுத்து தொடர்ந்து அதிகரித்த தொற்று 3 அலைகளாக பரவியது.
முதல் அலையில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அதிகபட்சமாக 6,997 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து ஆகஸ்டு மாதம் 15-ஆம் தேதி ஒரே நாளில் கரோனாவுக்கு 127 பேர் பலியாகினர்.
இதையடுத்து 2-ஆவது அலையில் கடந்த 2021-ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒரே நாளில் 36 ஆயிரத்து 184 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து எழுந்த 3-ஆவது அலையில் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கரோனா பரவலை தடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் சார்பில் பல் வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணியும் நடைபெற்றது.
தடுப்பூசி பணி
தமிழ்நாட்டில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகா தாரப் பணியாளர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் கரோனா தடுப் பூசி போடும் பணி நடைபெற்றது. இதை யடுத்து இணை நோய் உள்ளவர்கள், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டது.
முதல் தவணை தடுப்பூசி போட்ட வர்களுக்கு உரிய நாட்களுக்கு பின்னர் 2-ஆவது தவணை தடுப்பூசியும் செலுத் தப்பட்டது. அந்த வகையில் தமிழ் நாட்டில் கரோனா தடுப்பூசி போடு வோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. தமிழ்நாட்டில் நேற் றைய நிலவரப்படி 92 சதவீதம் பேர் முதல் தவணையும், 75 சதவீதம் பேர் 2-ஆவது தவணையும் கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு
தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதும் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. இதையடுத்து தடுப் பூசி போடும் பணி தொடங்கிய சில நாட்களில் பெரும் தொழிற்சாலைகள், திரையரங்குகள், பூங்காக்கள், வணிக வளாகங்கள், கடைகள் உள்ளிட்டவை களில் கரோனா தடுப்பூசி போட்ட வர்கள் மட்டுமே பணியில் இருக்க வேண்டும் என அரசு அறிவித்தது.
மேலும் பள்ளிக்கு வரும் ஆசிரி யர்கள், மாணவர்கள், அரசு அலுவ லகங்களுக்கு வரும் ஊழியர்கள், திரை யரங்குகளுக்கு வரும் பொதுமக்கள் என அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அரசு அறிவித்தது. மேலும் பொது இடங் களுக்கு வரும் பொதுமக்கள் அனை வரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
கரோனா பாதிப்பு குறைந்தது
தமிழ்நாட்டில் கடந்த சில நாட் களாக கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 50க்கும் குறைவானவர்களுக்கே கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. சில மாவட்டங்கள் கரோனா இல்லாத மாவட்டங்களாக தொடர்ந்து இருந்து வருகிறது.
கட்டுப்பாடுகள் விலக்கல்
இந்த நிலையில் தற்போது கரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக் கிக்கொள்ளப்படுகிறது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப் பதாவது:-
தமிழ்நாட்டில் கடந்த சில நாட் களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதையடுத்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ள அனைத்து கரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அனைத்து மாவட்ட துணை பொது சுகாதார இயக்குநர்களும், பெருநகர சென்னை மாநகராட்சியின் மாநகர நல அதிகாரியும் பொதுமக்கள் அனைவரும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளான சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல், கைகளை கழு வுதல் உள்ளிட்டவைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க ஊக்குவிக்க வேண்டும்.
இதைப்போல் தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி போடுவது குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் முதல், 2-ஆவது தவணை மற்றும் பூஸ்டர் ‘டோஸ்’ கரோனா தடுப்பூசி போட தகுதியானவர்கள் தாமாக முன் வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணிதல் கட்டாயம்
இந்த நிலையில் தமிழ்நாட்டில் பொது இடங்களில் முக கவசம் அணிவது தொடர்ந்து கட்டாயம் என டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறிய தாவது:-
தமிழ்நாட்டில் தற்போது பொது இடங்களில் கரோனா தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே வரவேண்டும் என்கிற உத்தரவு திரும்பப் பெறப்பட் டுள்ளது. முகக் கவசம், சமூக இடை வெளி உள்ளிட்ட பாதுகாப்பு வழி முறைகள் நீக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட பாது காப்பு வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment