அரியலூர், ஏப்.29- அரியலூரில் தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகத்தின் பணிமனை நுழைவாயில் பகுதியில் சட்ட விரோ தமாக கோயில் கட்டுவ தைக் கண்டித்தும், அதனை தடுத்து நிறுத்த வலியுறுத் தியும் கழகப் பொறுப் பாளர்கள் மண்டலத் தலைவர் பொறியாளர் இரா.கோவிந்தராசன், மாவட்டத் தலைவர் விடு தலை நீலமேகன் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளித்துள்ளனர். அப்புகாரில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது,
அரியலூர் நகரில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையின் நுழைவுவாயிலின் மேற்புறம் திடீரென்று சிலர் விநாயகர் கோவில் கட்டிவருவதாக அறிகின் றோம். மேற்படி இடம் அரசுக்கு சொந்தமான இடமாகும். அரசுக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி கட்டி வரும் கோவிலால் சட்ட ஒழுங்கிற்கு கேடு விளை யும்
ஆகவே, தாங்கள் மேற்படி பணிமனையில் கட்டிவரும் கோவிலை தடுத்தி நிறுத்தி அப்புறப் படுத்திட வேண்டுமாய் அரியலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள் கிறேன் என தெரிவித்து உள்ளனர்.
No comments:
Post a Comment