குழந்தைகளுக்கு அழகு தமிழில் பெயர் சூட்ட ‘சங்க கால மக்கட் பெயர்க் களஞ்சியம்' என்ற நூல் மத்திய தமிழாய்வு நிறுவனம் வெளியிடுகிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 5, 2022

குழந்தைகளுக்கு அழகு தமிழில் பெயர் சூட்ட ‘சங்க கால மக்கட் பெயர்க் களஞ்சியம்' என்ற நூல் மத்திய தமிழாய்வு நிறுவனம் வெளியிடுகிறது

சென்னை ஏப் 5- குழந்தை களுக்கு அழகான தூய தமிழ்ப் பெயர் சூட்டுவ தற்கு உதவும் வகையில் புதுமையான வழிகாட்டு நூல் வெளியிடுவதற்கு மத்திய தமிழாய்வு நிறுவ னம் முடிவு செய்துள்ளது.

தமிழ் செவ்வியலின் சிறப்பை உலகம் முழுவ தும் கொண்டு செல்லும் நோக்கில், மத்திய செம் மொழி தமிழாய்வு நிறு வனம் செயல்பட்டு வரு கிறது. திருக்குறளை 58 பழங்குடியினர் மொழி கள் உட்பட 120-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கும் பணி கள் நடைபெறுகின்றன. மேலும், தமிழில் உள்ள மணிமேகலை உட்பட சங்க இலக்கிய நூல்கள் மற்றும் இதர செவ்வியல் நூல்களை பல்வேறு உலக மற்றும் இந்திய மொழிகளில், இந்நிறு வனம் மொழிபெயர்த்து வருகிறது.

இதற்கிடையே சமீப காலமாக குழந்தைகளுக்கு தூய தமிழ்ப் பெயர் வைக்க, பெற்றோர் ஆர் வம் காட்டுகின்றனர். இதன் காரணமாக தமிழ் பெயரை வைக்க நினைக் கும் பெற்றோர், புழக்கத் தில் தூய தமிழ் பெயர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அந்த எண் ணத்தைக் கைவிடும் சூழ லும் ஏற்படுகிறது. மேலும், தவறான அர்த்தமுள்ள பெயர்களையும் சில நேரங்களில் வைத்து விடு கின்றனர். இதை சரி செய் யும் நோக்கத்தில் சங்க இலக்கியத்தில் குறிப்பி டப்படும் பெயர்களை உள்ளடக்கிய நூல் ஒன்றை மத்திய செம்மொழி நிறு வனம் விரைவில் வெளியிடவுள்ளது.

இதுதொடர்பாக அந்த நிறுவன இயக்குநர் இரா.சந்திரசேகரன் கூறி யதாவது: செம்மொழி மத்திய நிறுவனம் மொழி பெயர்ப்பு நூல்கள், ஆய்வு நூல்கள், அகராதி நூல்கள் என பல்வேறு வெளியீடுகளைத் தமிழ் ஆய்வுலகத்துக்கு அளித் துள்ளது. அடுத்தபடியாக ‘சங்க கால மக்கட் பெயர்க் களஞ்சியம்’ என்ற நூல் மிகவும் முக்கியத்துவமிக்க ஒன்றாக அமையவுள்ளது. சங்ககாலத் தமிழ் மக்க ளின் பெயர்கள் இயற்கை யோடு ஒன்றியுள்ளன. பெயர் என்பது ஒருவரின் முழு அடையாளமாகத் திகழ்வதை இலக்கியங் களில் அறிய முடிகிறது.

ஒருவரின் பெயர் என் பது அவரை மட்டும் குறிப் பிடுவதில்லை அவரது புலமை, சிந்தனை, ஆளு மைத் திறன், அவர் பெற்ற புகழ் உள்ளிட்ட அனைத் தையும் உள்ளடக்கியதா கவும், குறிப்பாக அவரது மரபைத் தெரிவிப்பதாக வும் அமைகிறது. எனவே தான், தொல்காப்பியர் மனிதர்களைக் குறிக்கக் கூடிய பெயர்கள் எப்படி அமைய வேண்டும், அப் பெயர்கள் அமைந்து வழங்க வேண்டிய சூழல் களை எல்லாம் தொகுத்து வகைப்படுத்தி இலக்க ணம் வகுத்துள்ளார். சங் ககாலப் புலவர்கள் மன் னரை நோக்கிப் பாடும் போது அவரின் பெயர் நிலைக்கும்படியாகப் புகழ்பெறுக என்று பாடி யுள்ள குறிப்புகளைப் பாடல்களில் காண முடி யும்.

தற்போதைய கால கட்டத்தில் பெயரில் என்ன இருக்கிறது என்று மிக மேலோட்டமாகச் சிந்தித்து பலரும் செயல் படுகிறார்கள். தமிழர்க ளுக்கு எல்லாமே பெயரில் தான் அடங்குகிறது. பெயரை கொண்டே இனம், மொழி, கலாச் சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை அடையாளம் காண முடியும். நவீனம் என்ற மாயையில் தமிழ்ப் பெயர் கள் வழக்கொழிந்துவிட் டன.

இந்நிலையில்தான், புலவர் பா. இறையரசனின் ‘சங்க கால மக்கட் பெயர்க் களஞ்சியம்’ என்றொரு நூலை செம்மொழி மத் திய நிறுவனம் வெளியிட உள்ளது. அரசர்கள், சிற் றரசர்கள், குறுநிலத் தலைவர்கள், வள்ளல்கள், வீரர்கள், புலவர்கள், பொதுமக்கள் என இதில் 611 சங்க காலப் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், பெயருக்கான காரணம், அதற்கான விளக்கம் என அனைத்து விவரங்களும் இடம்பெற் றுள்ளன.

தமிழில் பெயர் சூட் டும் ஆர்வமுள்ள அனை வருக்கும் இக்களஞ்சியம் பெருந்துணையாக அமை யும். இந்நூலின் துணையு டன் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டி மகிழ்ந்து மரபைப் பேணிக் காக்க அனைவரும் முன் வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment