வானூர் அருகே பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 5, 2022

வானூர் அருகே பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று (5.4.2022) விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், கொழுவாரி ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் பகுத்தறிவுப் பகலவன்  தந்தை பெரியார் அவர்களின் சிலையினை திறந்துவைத்தார். மேலும் ஒழுந்தியாம்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற அரசு விழாவில், பல்வேறு துறைகளின் சார்பில் 24 கோடியே 77 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான  முடிவுற்ற 38 திட்டப் பணிகளை திறந்து வைத்து, 42 கோடியே 69 இலட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை 10,722 பயனாளிகளுக்கு வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி,  ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்,  சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் து.ரவிக்குமார்,  சட்டமன்ற உறுப்பினர்கள் நா.புகழேந்தி, டாக்டர் இரா.இலட்சுமணன்,  எ.ஜெ. மணிகண்ணன், சி.சிவகுமார், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மைச் செயலாளர் பி.அமுதா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர்  பிரவீன்.பி.நாயர்,  விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன்,  மாவட்ட ஊராட்சித்  தலைவர்  ம.ஜெயச்சந்திரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment