பட்டு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 29, 2022

பட்டு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை: அமைச்சர் தா.மோ.அன்பரசன்

சட்டப்பேரவையில் நேற்று (28.4.2022) பட்டுவளர்ச்சி மற்றும் கைவினைப் பொருட் கள் தொடர்பான அறிவிப்புகளை குறு,சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வெளியிட்டார். முக்கிய அறிவிப்புகள் வருமாறு:

அதிக மகசூல் தரும் மல்பெரி ரகங்கள் நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக ஏக்கருக்கு ரூ.10,500 வீதம் 5 ஆயிரம் ஏக்கருக்கு ரூ.5 கோடியே 25 லட்சம் நிதியதவி வழங்கப்படும்.

தரமான பட்டுக்கூடு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் தனி பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைப்பதற்காக 500 பட்டு விவசாயிகளுக்கு ஒரு மனைக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.6 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும். பட்டுக் கூடுகளின் தரத்தை அதிகரிக்கும் பொருட்டு 1,000 பட்டு விவசாயிகளுக்கு ரூ.5 கோடியே 25 லட்சம் மதிப்பில் நவீன பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்கள், பண் ணை உபகரணங்கள் வழங்கப்படும்.

பவர் டில்லர் வாங்கு வதற்காக 300 பட்டு விவசாயிகளுக்கு தலா ரூ.35 ஆயிரம் வீதம் ரூ.1 கோடியே 5 லட்சம் வழங்கப்படும்.

மாநில அளவில் சிறந்த பட்டு நூற்பாளர் களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.

மரச்சிற்ப கைவினைஞர் களின் நலனுக் காக சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் பல்வேறு வசதிகளுடன் ரூ.1 கோடி மதிப்பில் மரச்சிற்ப கைவினைக் கிராமம் அமைக்கப் படும். தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள், கோயில்கள், வரலாற்றுச் சின்னங்கள் ஆகியவற்றின் முக்கியத்து வத்தை கைவினைப் பொருள்கள் மூலம் நினைவு பரிசுகளாக உற்பத்தி செய்து சுற்று லாப் பயணிகளுக்காக சந்தைப்படுத்தப் படும்.

இந்த அறிவிப்புகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டார்.


No comments:

Post a Comment