வன்முறை தொடர்கிறது! விழுப்புரத்தில் பெரியார் சிலை உடைப்பு - பதற்றம் காவல்துறை குவிப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 1, 2022

வன்முறை தொடர்கிறது! விழுப்புரத்தில் பெரியார் சிலை உடைப்பு - பதற்றம் காவல்துறை குவிப்பு!

விழுப்புரம், ஏப். 1 விழுப் புரம் கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியில் பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்களை காவல்துறையினர் தேடி வரு கின்றனர்.

விழுப்புரம் கீழ்ப்பெரும் பாக்கத்தில் உள்ள தந்தை பெரியார் படிப்பகம் முன்பு மார்பளவு பெரியார் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை நேற்று (31.3.2022) மதியம் அடையாளம் தெரியாத சிலர் சேதப்படுத்திவிட்டு தப்பியோடி விட்டனர். தகவலறிந்ததும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிறீநாதா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் அப் பகுதியில் உள்ள கண்காணிப்பு (சிசி டிவி) கேமரா உதவியுடன் சிலையை சேதப் படுத்திய நபர்களை கண்டுபிடிக்க உத்தர விட்டார்.

அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப் பட்டுள்ளனர். சேதமடைந்த சிலையை துணியால் மூடியும், பூட்டுப் போட்டும் பாதுகாப்பாக வைத்துள்ளனர். மேலும் அப்பகுதி பொது மக்கள் சிலர் சிலை உடைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.  சிலையை உடைத்த நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டுமென காவல்துறை கண்காணிப்பாளரிடம் வலியுறுத்தினர்.

உடனடியாக சீரமைப்பு

பெரியார் சிலை உடைக்கப்பட்டதால், அசம்பாவிதங்களை தவிர்க்க காவல் துறை துணை கண்காணிப்பாளர் பார்த் திபன் தலைமையிலான காவல்துறையினர் துரித நடவடிக்கை மேற்கொண் டனர். சிலையை உடனடியாக சீரமைத்து மாலை அணிவிக்க ஏற்பாடு செய்தனர். இதையடுத்து  திராவிடர் கழகம், தி.மு.., தொ.மு.. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள்,  பொது மக்கள்  சீரமைக்கப்பட்ட தந்தை பெரியார் சிலைக்குமாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் சிலையை துரிதமாக சீரமைக்க ஏற்பாடு செய்த காவல்துறையினரையும் பாராட்டினர்.


No comments:

Post a Comment