திருவாரூர், ஏப். 2- திருவாரூர் மாவட்டம் பகுத்தறிவு ஆசிரியர் அணி சார்பில் 31.3.2022 அன்று மாலை 6 மணியளவில் கல்லூரி மாணவர்களிடையே பகுத் தறிவு ஆசிரியர் அணி மாவட்ட செயலாளர் ஆர்.எபநேசர் ஜான்சன் தலைமையில், திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப் பினர் எஸ்.வி.சுரேஷ் முன் னிலையில் கல்வியின் அவ சியம் குறித்தும் எதிர் காலத்தில் இட ஒதுக்கீ டுக்கு ஏற்பட இருக்கிற நெருக்கடியையும் நீட் போன்ற நுழைவு தேர்வு கள் மற்றும் மற்றும் அரசு கலைக்கல்லூரி வரை இத்தேர்வு வர இருப்பதை மாணவர்களிடையே விளக்கி மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தின் தொடக் கத்தில் மாநிலப் பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் இரா.சிவகுமார் தொடக்க உரையாற்றினார்.
இறுதியாக மாணவர் தமிழன்பன் நன்றியுரை யாற்றினார் மாணவர்களி டையே மிக எழுச்சியும் உணர்ச்சியும் தெளிவும் இருப்பதை கண்டு பெரு மகிழ்ச்சி அடைந்தோம்.
No comments:
Post a Comment