பாபநாசம் பள்ளியில் அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரியின் பிறந்த நாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 1, 2022

பாபநாசம் பள்ளியில் அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரியின் பிறந்த நாள் விழா

பாபநாசம், ஏப். 1- அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரியின் 123ஆவது பிறந்த நாள் (13.3.1900) விழா 15.3.2022 அன்று அவரது பெயரில் அமைந்துள்ள மேல் நிலைப் பள்ளியில் சிறப்பாகக் கொண் டாடப்பட்டது.

பாபநாசம் திராவிடர் சமு தாய நல கல்வி அறக்கட்ட ளையின் மூலமாக நடத்தப் பட்ட நிகழ்வில் தலைமைச் செயலாளர் .திருஞானசம் பந்தம், வரதராசன், கு..செய ராமன் ஆகிய அறங்காவலர் களும், பள்ளி முதல்வர் உள் ளிட்ட எல்லா அலுவலர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டு அழகிரி உருவப் படத்திற்கு மலர் தூவி செலுத்தினர். பள்ளி மாணவர் களின் நெஞ்சங்களின் எழுச்சிமிக்க பகுத்தறிவு சிந்தனையை ஊக்கப்படுத்தும் வகையில் கு..செயராமன் அழகிரியின் வாழ்க்கை வரலாற்றினை சுருக்கமாக உரையாற்றி தான் எழுதியஅஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிஎன்ற சிறு வரலாற்று நூல் களை மாணவர்களுக்கு இனிப் புடன் இணைத்து வழங்கினார்.

தொடர்ச்சியாக அருகி லுள்ள சிற்றூரில் நடந்த தீ விபத்து. நிவாரணமாக அறக் கட்டளையின் மூலமாக

ரூ. 3000 நிதி வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment