கடந்த 21 நாள்களாக ஏப்ரல் 3 ஆம் நாள் நாகர்கோயிலில் தொடங்கி ஏப்ரல் 25 ஆம் நாள் சென்னை வரை 4700 கி.மீ. பயணம் செய்து நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு ஆகியவற்றை முன்னிறுத்தி தமிழ்நாட்டையும் - புதுச் சேரியையும் சுழன்றடித்திருக்கிறார் தமிழர் தலைவர்.
கோடை வெயிலும் - ஆங்காங்கே கொட்டிய மழையையும் பொருட்படுத்தாமல் மாநிலத்து மக்க ளின் உரிமை களைப் பாதுகாத்திட பயணத்தை வெற்றிகரமாக முடித் திருக்கிறார் ஆசிரியர் .
பயணத்தின் வெற்றியோடு நின்று விடப்போவ தில்லை. பயணத்தின் நோக்கம் வெல்ல அடுத்தடுத்து படையணி களை திரட்டுகிறார்.
ஆம், வரும் ஏப்.30 ஆம் நாள் சனிக்கிழமை காலை 11 மணிக்கு ஆசிரியர் தம் தலைமையில் மாநில இளைஞரணி கலந்துரையாடல். இது வெறும் கலந்து உரையாடி கலைந்து போவதற்கான கூட்டமல்ல. களம் அமைக்கும் கூட்டம்.
அதற்கான ஒத்திகையை அன்று மாலையே பார்க்க விருக்கிறார் தமிழர் தலைவர் . எப்படி என்று கேட்போரும் உண்டு தானே, அவர்களுக்கும் சொல்கி றோம். 30 ஆம் தேதி மாலை சென்னை எழும்பூர் தொடர்வண்டி சந்திப்பில் ஹிந்தி அழிப்பு எதிர்ப்புப் போராட்டம்.
"பூட்டிய இருப்புக் கூட்டின் கதவுகள் திறக்கப் பட்டன. சிறுத்தையே வெளியே வா" என்றாரே புரட் சிக் கவிஞர். அந்த சொல்லை நெஞ்சில் ஏந்தி திராவிட இளைஞர் சேனை தமிழர் தலைவர் தலைமையில் எம்மொழியைக் கொல்ல வரும் ஹிந்தியை தார் கொண்டு அழிக்க உள்ளனர்.
ஹிந்தி எதிர்ப்பு வரலாற்றை படித்த கருஞ்சிறுத்தை காளையர்களே, வருக - வரலாறாக.
90 வயதை தொடும் தலைவர் அவர்களே உங்கள் இலட்சியப் பயணத்தை வென்றெடுக்க ஓடோடி வருகி றோம் உங்கள் பின்னால்.
அன்புடன்.
த.சீ.இளந்திரையன்
மாநில இளைஞரணிச் செயலாளர், திராவிடர் கழகம்.
இரா.ஜெயக்குமார்
பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment