விண்வெளி ஆய்வின் அடுத்த பாய்ச்சல், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி நிலை நிறுத்தப்பட்டது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 2, 2022

விண்வெளி ஆய்வின் அடுத்த பாய்ச்சல், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி நிலை நிறுத்தப்பட்டது

இந்த பேரண்டத்தில் முதல் ஒளி எது என்பதை இதுவரை கணக்கீடுகள் மூலம் தான் நாம் கணித்துக்கொண்டு இருந்தோம்,

இந்த நிலையில் அதிநவீன தொலை நோக்கியான ஜேம்ஸ் வெப் கடந்த ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி பிரஞ்ச் கயானா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து அய்ரோப் பிய ராக்கெட் சுமந்து சென்றது

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியுடன் சென்ற அய்ரோப்பிய ராக்கெட் சரியாக இயங் கியது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை சரியான உயரத்திலும், பூமத்திய ரேகையை ஒட்டிய கச்சிதமான சாய்விலும், சரியான வேகத்திலும் பயணிக்க உதவியது.

ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி  விண்வெளியில் முழுமையாக வெளிவந்து தனது பணியைத் துவங்கிக்கொண்டு மேலும் முன்னேறிக்கொண்டிருக்கிறது.  தனித்து விடப்பட்ட உடனேயே ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பேரண்டத்தில் முத லில்  மின்னத் தொடங்கிய நட்சத்திரங்களைப் படம் பிடிக்கும் தன் பயணத்தைத் தொடங்கி விட்டது.

இந்தக் காணொலியை ஜனவரி முதல் வாரமே அனுப்பியது. அது சில மணித்துளி தாமதத்தோடு பூமிக்கு பகிரப்பட்டது. ஆனால் காணொலியின் சமிக்ஞை சரிவர கிடைக்கவில்லை. அய்ரோப்பிய விண் வெளி ஆய்வு மய்யம் அக்காணொலியை சரி செய்து, அதனோடு பிரிட்டனைச் சேர்ந்த சார்லொட் ஹதெர்லேவின் இசை யைச் சேர்ந்து வெளியிட்டுள்ளது.

இத்தொலைநோக்கி பேரண்டம் குறித் தும், அங்கு தொலை தூரத்தில் இருக்கும் விண்மீன்களைச் சுற்றிக் கொண்டிருக்கும் கோள்களைக் குறித்தும் பல புதிய கண்டு பிடிப்புகளை நிகழ்த்தும் என ஆய்வாளர் கள் நம்புகின்றனர்.

தற்போது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அப்சர்விங் பொசிஷன் என்றழைக்கப்படும் கண்காணிக்கும் நிலைக்குச் செல்கிறது. அது பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அது எந்த இடத்தில் இருக்கவேண்டும் என்று ஆய் வாளர்கள் முடிவு செய்தார்களோ அந்த இடத்தில் தொலைநோக்கி நிலை பெற ஏற்கெனவே  நிலவின் சுற்றுவட்டப் பாதை யைக் கடந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

தொலைநோக்கியை விண்ணுக்கு கொண்டு செல்லும் ராக்கெட்டின் பயணம் செயல்பாடு சிறப்பாக இருந்தது. பயணப் பாதையை சரி செய்து கொள்ளும் போது தொலைநோக்கியில் எரிபொருள் அதிகம் பயன்படுத்த வேண்டிய தேவை எழாததால், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் வாழ் நாள் கணிசமாக நீட்டிக்கப்படலாம் என திட்ட கட்டுப்பாட்டுக் குழுவினர் நம்பு கின்றனர்.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் சோலார் அடுக்குகள் விரிந்த வேகத்தை காணொலியில் பார்க்க முடிந்தது. ராக் கெட்டின் மேலடுக்கில் இருந்து தொலை நோக்கி வெளியேற்றப்பட்ட பிறகு வெறும் 70 நொடிகளுக்குள் சோலார் அடுக்குகள் வெளி வந்தன.

சோலார் அடுக்குகள் வெளி வரும் நிகழ்வு பல நிமிடங்களுக்குள் நடக்கும் என எதிர்பார்க்கப்படவில்லை, ஆனால் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பாதுகாப் பாக களமிறக்கப்படத் தேவையான சூழல் இருப்பதை உறுதி செய்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் கணினிகள், சோலார் அடுக்கு உடனடியாக விரிய கட்டளை யிட்டது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மடித்து வைக்கப்பட்ட நிலையில், மிக நெருக்கமாக 10.7 மீட்டர் நீளத்துக்கு 4.5 மீட்டர் அகலம் மற்றும் 4.5 மீட்டர் உயர பெட்டியில் பத்திரமாக அடைக்கப்பட்டது. தற்போது தன்னைத் தானே முழுமையாக விரித்துக் கொள்ள ஜேம்ஸ் வெப் தொலை நோக்கிக்கு வழிகாட்டப்படுகிறது.  அதிலும் குறிப்பாக, மிகுந்த சிக்கலான மிகப்பெரிய சூரிய கேடயம் முழுமையாக விரிய அடுத்த சில நாட்களில் திட்டமிடப்பட்டுள்ளது.

ராக்கெட்டில் இருந்து, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி தனியாக பிரிந்து செல்லும் காணொலியைப் படம் பிடித்த கேமரா அமைப்பை, அயர்லாந்தைச் சேர்ந்த ரியால்ட்ரா ஸ்பேஸ் சிஸ்டம் என்ஜினியரிங் என்கிற நிறுவனமே வடிவமைத்தது.

பிரெஞ்சு கயானாவில் உள்ள விண் வெளி மய்யத்திலிருந்து ராக்கெட் ஏவுத லை நிர்வகிக்கும் ஏரியன்ஸ்பேஸ், ரியால்ட்ரா தொழில்நுட்பத்தை அய்ரோப் பாவின் அடுத்த தலைமுறை ஏரியன் வாக னமான ஏரியன் 6இல் பயன்படுத்த உள்ளது.

சார்லொட் ஹதெர்லே முன்பு அய் ரோப்பிய விண்வெளி மய்யத்தில் பணி யாற்றினார். ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி காணொலியில் பயன்படுத்தப்பட்டுள்ள பாடலின் பெயர் லோன்லி வால்ட்ஸ். இப் பாடல் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான 'டுரூ லவ்' என்கிற ஆல்பத்தில் இடம் பெற்றிருந்தது.

No comments:

Post a Comment