ஏட்டு திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 27, 2022

ஏட்டு திக்குகளிலிருந்து

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலை முன்னிறுத்தி டி.ஆர்.எஸ். கட்சியின் ஆண்டு விழாவில் நாட்டை பிளவுபடுத்தும் மதவாத சக்திகளை அப்புறப்படுத்த அனைவரையும் ஒருங்கி ணைத்து போராட முடிவு என அக்கட்சியின் தலைவர் ஹரி ராவ் கூறியுள்ளார்.

தி ஹிந்து:

ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மாணவர்களுடன் நடைபெற்ற உரையாடலில், நீட் தேர்வு எதிர்ப்பில் சமூக நீதி கண்ணோட்டம் உள்ளது என்றார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.

தி டெலிகிராப்:

பள்ளி பாடத்திட்டங்களில் வேதங்களிலிருந்தும்,  இந்து மத நூல்களில் இருந்தும்  பொருத்தமானவற்றை அறிமுகப்படுத்த பரிந்துரைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு விரும்புவதாக கல்வி அமைச்சக அதிகாரி கூறுகிறார்.

பாஜகவை எதிர்கொள்ள மாநிலம் முழுவதும் கட்சியின் அடிப்படை அலகுகளாக இருந்த பஞ்சாயத்து அளவிலான குழுக்களுக்குப் பதிலாக பூத் அளவிலான குழுக்களை முதன்மை அலகுகளாக அமைக்க ஆர்ஜேடி கட்சி  வியூகம் வகுத்துள்ளது.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment