சாமியார்களிடையே மோதல் காவல்துறையில் பெண் சாமியார் புகார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 5, 2022

சாமியார்களிடையே மோதல் காவல்துறையில் பெண் சாமியார் புகார்

திண்டுக்கல்,ஏப்.5- திண்டுக்கல் மாவட்டம் ஆரோக்கிய மாதா தெருவில் வசித்து வருபவர் பவித்ரா.  இவர், தன்னை காளியின் அவதாரம் எனக் கூறி வருகிறார்.

பவித்ரா, திருஞானம் என்ற சாமியார் அளித்த புகாரின்பேரில், கடந்த இரு மாதங்களுக்கு முன் னர், நிலமோசடி விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.

தற்போது பிணையில் வெளி வந்துள்ள பவித்ரா, சென்னையில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில், அதே சாமியார் மீது பாலியல் வழக்கு தொடுத்துள்ளார்.

தான் சாமியார் அல்ல என் றும், இந்தியா முழுவதும் உள்ள கோவில் களுக்குச் செல்லும் தர்மாச்சாரியா என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

திருஞானம் என்ற போலி சாமியார், தன்னை ஏமாற்றி பண மோசடி செய்துவிட்டதாகவும், புலித்தோல், மான்தோல், மயில் தோகை மற்றும் போதைப் பொருள் விற்பனை என சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதோடு, நீண்டகாலம் வாழ வேண்டும் என்ற ஆசையில் மயில் ரத்தத்தை சுவைத்து வருவதாகவும் பவித்ரா குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், தான் காளியின் அவ தாரம் என்பதால், தன்னைத் தானே சிவன் எனக் கூறிக் கொள்ளும் சாமியார் திரு ஞானம், தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறும் பவித்ரா, ’வாழ்வில் மகிழ்ச் சியாக இருக்க வேண்டுமென்றால் தவயோகியை சந்தோசமாக வைத்துக் கொள்ள வேண்டும்என்று திருஞானம் பேசி அனுப் பிய ஆடியோவையும் வெளியிட்டுள்ளார்.

அதேசமயம் தன்னை எதிர்ப்ப வர்களை சத்தமே இல்லாமல் கொலை செய்து விடுவதாகவும், இதுவரை 30க்கும் மேற்பட்டவர் களை கொன்றுள்ளதாகவும் கூறி யுள்ள திருஞானம், தாம் சிவனின் அவதாரம் என்பதால், 900 கொலை வரை செய்யலாம் என்றும் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகக் கூறி புகார் மனுக்களுடன் காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

No comments:

Post a Comment