மேட்டுப்பாளையத்திற்கு வருகை தரும் தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க கலந்துரையாடலில் முடிவு
கோவை, ஏப். 1- 28.03.2022 அன்று 10 மணியளவில் மேட்டுப் பாளையம் மாவட்ட தலைவர் சு.வேலுச்சாமி தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
பொதுக்குழு உறுப்பினர் சாலை வேம்பு சுப்பையன், மாவட்ட செய லாளர் கா.சு.ரங்கசாமி, முன்னிலை யேற்று உரையாற்றினர். கழக பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் கலந்துகொண்டு கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கத்தினை விளக்கி கருத்துரை யாற்றினார். தொடர்ந்து மாநில அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம் உரையாற்றினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் மேட்டுப்பாளையத் தில் ஏப்ரல் 17இல் நடைபெறவுள்ள நீட் தேர்வு எதிர்ப்பு பிரச்சார கூட்டத்திற்கு நன்கொடையாக பொதுக்குழு உறுப்பினர் சாலை வேம்பு சுப்பையன் ரூ.10.000 வழங்கி சிறப்பித்தார்
கூட்டத்தில் மேட்டுப்பாளை யம் நகர செயலாளர் வெ.சந்திரன், மாவட்ட அமைப்பாளர் வீ.செல்வ ராஜ், காரமடை ஒன்றிய தலைவர் அ.மு.ராஜா, விடுதலை வாசகர் வட்டம் கு.வெ.கி செந்தில், தாரா புரம் மாவட்ட தலைவர் கணியூர் கிருஷ்ணன், தஞ்சை நகர செயலாளர் டேவிட், உள்ளிட்ட கழக தோழர்கள் பங்கேற்றனர்.
தீர்மானம்: இரங்கல் தீர்மானம் 1,
கோவை மாவட்ட திராவிடர் கழக தலைவர் ம.சந்திரசேகரனின் தந்தையார் மருதாசலம் 27.3.2022 மறைவிற்கும், கோவை தெற்கு பகுதி கழக செயலாளர் புண்ணிய மூர்த்தி 24.12.2021 மறைவிற்கும், கோவை மாவட்ட மாணவர் கழகத் தோழர் யாழினியின் தாயார் ராஜேஸ்வரி, 24.2.2022 ஆகியோர் மறைவிற்கு கோவை & மேட்டுப் பாளையம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்க லையும் வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 2,
19.03.2022 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திரா விடர் கழக தலைமை செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்று செயல்படுத் துவது என முடிவு செய் யப்படுகிறது.
தீர்மானம் 3,
நீட் தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு ஆகிய முழக்கங்களை முன்நிறுத்தி ஏப்ரல் 3 அன்று நாகர்கோவிலில் தொடங்கி ஏப்ரல் 25 அன்று சென்னை வரை பரப் புரை பெரும் பயணம் மேற் கொண்டு வரும் ஏப்ரல் 17 அன்று மேட்டுப்பாளையத்தில் சிறப்புரை யாற்ற உள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பங்கேற்கும் பொதுக் கூட்டத்தை எழுச்சியுடன் நடத்துவது எனவும் முடிவு செய் யப்படுகிறது.
பொதுக்கூட்டத்தை மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தும் வகை யில் சுவரெழுத்து, சுவரொட்டி, உள்ளூர் தொலைக் காட்சிகளில் விளம்பரம், பதாகைகள், நிதி வசூல், ஒலிபெருக்கி விளம்பரம் உள்ளிட்ட அனைத்தையும் கழகத் தோழர்கள் ஒன்றிணைந்து மிக சிறப்பாக செயல்படுத்துவது என தீர் மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 4
ஏப்ரல், மே மாதங்களில் ஒன் றிய மற்றும் கிளைக் கழகங்களில் கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி கழக அமைப்புகளை புதுப் பிப்பது எனவும், மாவட்டம் முழு வதும் பரவலாக தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது, ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் (சனி-ஞாயிறு) பெரியாரியல் பயிற்சி வகுப்புகளை வாய்ப்புள்ள இடங் களில் நடத்துவது எனவும் முடிவு செய்யப்படுகிறது.
தீர்மானம் 5
தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகள் அடங்கிய புத்தகங் களை உலக மக்கள் அறிந்திடும் வகையில் இந்திய மற்றும் உலக மொழிகளில் மொழிபெயர்த்து பரப்பிட 5 கோடி நிதியை தமிழ் நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கி "பெரியார் உலகமயம், உலகம் பெரியார்மயம்" என்ற சாதனையை படைத்துள்ள "சமூக நீதியின் சரித்திர நாயகர்" தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கோவை மாவட்ட திராவிடர் கழகம் பாராட்டு களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 6
தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் மூடநம்பிக்கையை வளர்க்கும் போக்கிற்கு மாவட்ட திராவிடர் கழகம் தனது கண்ட ணத்தை பதிவு செய்வதோடு இனி வரும் காலங்களிலாவது பகுத்தறிவு சிந்தனை வளர்க்கும் வகையில் தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் செயல் படவேண்டும் என்று கோரிக்கை விடுத்து தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. மேற்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
No comments:
Post a Comment