ஆசிரியர் கி.வீரமணியின் கோரிக்கையை ஏற்று பாரதிதாசன் பிறந்தநாளை தமிழர் எழுச்சி நாளாக கொண்டாட வேண்டும்: வைகோ வேண்டுகோள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 29, 2022

ஆசிரியர் கி.வீரமணியின் கோரிக்கையை ஏற்று பாரதிதாசன் பிறந்தநாளை தமிழர் எழுச்சி நாளாக கொண்டாட வேண்டும்: வைகோ வேண்டுகோள்

சென்னை, ஏப்.29 பாரதிதாசன் பிறந்தநாளை தமிழர் எழுச்சி நாளாக கொண்டாட வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று (28.4.2022) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

''எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு'' என்று சங்கநாதம் எழுப்பியவர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். பெரி யாரால், சிந்தை இனிக்கும் செந்தமிழ் கவிஞராகப் போற்றப்பட்டார். தம் வாழ்நாள் எல்லாம் தமிழுக்காகப் போராடினார். அவரது பிறந்தநாளை, தமிழர் எழுச்சி நாளாகக் கொண்டாட வேண்டும் என்று, அண்மையில் பெரியார் திடலில் நடைபெற்ற பிரச்சாரப் பெரும் பயண நிறைவு விழாவில் ஆசிரியர் வீரமணி அவர் களின் அருமையான கோரிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்பு வைத்தார்.

யாரும் கேட்காமலேயே பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாள் ஆகவும், அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாள் ஆகவும் அறிவித்து, அரசு ஊழி யர்களை உறுதிமொழி ஏற்கச்செய்து வரலாறு படைத்த முதலமைச்சர், ஆசிரியர் வீரமணி அவர்களின் கோரிக்கையை ஏற்று, பாரதிதாசன் பிறந்தநாளை (ஏப்ரல் 29ஆம் தேதி) கொண்டாடுவதும், அந்த எழுச்சியின் அடிப்படையில் ''எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்... இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே'' என்று உறுதி பூணுவதும், காலத்தின் கட்டாயமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment