கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கல்
தஞ்சைக்கு அருகில் உள்ள களிமேடு கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில், தேர் இழுத்தபொழுது, அதன் மேல்பாகம் மின்சாரக் கம்பிகளில் உராய்ந்ததினால் தேர்த் தீப்பிடித்து எரிந்ததில் 11 உயிர்ச் சேதங்களும், சிலர் படுகாயங்களும் அடைந்தனர் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துவதோடு, துயரமும் அடைகிறோம்.
கொள்கை அளவில் இது மூடநம்பிக்கையினால் ஏற்பட்ட விபத்து என்றாலும், அது இப்பொழுது பார்க்கப்படவேண்டிய அந்தக் கோணம் அல்ல; மனித உயிர்கள், மனிதர் நலவாழ்வுக் கண்ணோட்டத்தில் இது எவ்வளவு வேதனையானது! பக்தர்களின் உயிரும் மனித உயிர்கள் அல்லவா!
நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். உடனடியாக தஞ்சைக்கு விரைந்து - பறந்து சென்று, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமுற்றவர்களுக்கும் ஆறுதல் கூறியும், அவர்களுக்கு நிவாரணம் அறிவித்திருப்பதும் - நமது முதலமைச்சரின் அதிவேகக் கருணைச் செயலுக்கு எடுத்துக்காட்டாகும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
27.4.2022
No comments:
Post a Comment