மின்சாரம்
கேள்வி: தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று பிரதமர் மோடி தமிழ் மக்களுக்கு தமிழிலேயே வாழ்த்துச் செய்தி தெரிவித்துள்ளார். ஆனால் தமிழகத்தில் இருந்து கொண்டு தமிழக முதல்வர் எந்தச் செய்தியும் கூறவில்லையே ஏன்?
பதில்: புத்தாண்டு வாழ்த்துச் செய்தியா? ‘நீட்’ மசோதாவை ஆளுநர் டெல்லிக்கு அனுப்பவில்லை என்ற துக்கத்தால் ஆளுநரின் தமிழ்ப் புத்தாண்டு விருந்துக்கும் ஸ்டாலின் செல்லவில்லை. அந்த வேதனையில் புத்தாண்டையே, ‘நீட்’ துக்க நாள் என்று அறிவிக்காமல் இருந்தாரே என்று மகிழ்ச்சி அடையுங்கள்.
துக்ளக் - 4.5.2022
ஆம்பளைக்கும் ஆம்பளைக்கும் பிறந்த (கிருஷ்ணன் - நாரதன்) பிள்ளைகள் தமிழ் ஆண்டுகள் என்று தமிழைச் கொச்சைப் படுத்துபவர்கள் செய்யும் கிண்டலையும் கேலியையும் பாருங்கள்.
கேள்வி: அயோத்தியா மண்டபத்தைக் கைப்பற்ற அறநிலையத்துறை ஏன் துடிக்கிறது?
பதில்: அயோத்தியா மண்டபம் என்பது அதன் பெயர். போதாதென்று அது பிராமணர்கள் குழுமி பஜனை, பிரார்த்தனை செய்யும் இடமும் கூட, திமுக அரசு அதைக் கைக் கொள்ளத் துடிக்க வேறு என்ன காரணம் வேண்டும்?
- துக்ளக் 4.5.2022
ஆக பிராமணர்கள் மட்டும் கூத்தடிக்கும் மண்டபம் - மற்றவர்களுக்கு அங்கு இடம் கிடையாது - இன்னும் அந்த பூணூல் ஆணவம் எப்படி எல்லாம் கொக்கரிக்கிறது பார்த்தீர்களா?
கேள்வி: ஹிந்து மதத்தின் கோட்பாடுகளைக் கழகம் சீண்டுவதை, வழக்கமாகக் கொண்டுள்ளது என்பது புதிது இல்லையே?
பதில்: புதியது இல்லைதான். அது தெரிந்தும் நாங்கள் ஹிந்து எதிர்ப்பாளர்கள் இல்லை என்று நடுத்தெருவில் சத்தியம் செய்ததை நம்பி ஹிந்துக்கள், தி.மு.க.வுக்கு வாக்களித்ததுதான் ஆச்சரியம். அப்போது தி.மு.க.வின் டி.என்.ஏ.வில் ஹிந்து எதிர்ப்பு ஊறியிருக்கிறது என்று நாம் கூறியிருந்தோம். அது செவிடன் காதில் ஊதிய சங்கானது.
- துக்ளக் 4.5.2022
அப்படியா? பிராமணர்களே! பூணூலைப் பிடித்துக் கொண்டு தி.மு.க.வுக்கு ஓட்டுப் போடுங்கள், என்று ஆச்சாரியார் (ராஜாஜி) சொன்னாரே ஏன்?
கேள்வி: ‘ராமர் பிறக்காமல் இருந் திருந்தால் பா.ஜ.க. எந்தப் பிரச்னையை எழுப்பி ஓட்டு வாங்கியிருக்கும்‘ என்று மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கேட்டிருக்கிறாரே?
பதில்: அன்றைய த்ரேதா யுக ராமரை விடுங்கள். இன்றைய கலியுகத்தில் பால் தாக்கரே பிறக்கவில்லை என்றால் சிவசேனா என்ற ஒன்று
இருக்காது. “ராமர் பிறக்காமல் இருந்திருந்தால்” என்று பா.ஜ.க.வைக் கேட்க ஒரு உத்தவ் தாக்கரேயே பிறந்திருக்க மாட்டார்.
- துக்ளக் 4.5.2022
ராமனா, எந்த ராமன்? புத்திர காமேஷ்டி யாகத்தில் பிறந்தானே அந்த ராமனா?
தசரதன் நடத்திய யாகத்தில் அவன் மனைவிகளில் ஒருத்தியாகிய கவுசலை என்பவள் குதிரையை ஒரே வெட்டில் வெட்டிக் கொன்று அந்தச் செத்தக் குதிரையுடன் ஒரு இரவு முழுவதும் கட்டிப்படுத்துக் கொண்டிருந்தாள். (பால காண்டம், 14ஆவது சருக்கம்)
தசரதனின் மனைவிமார்களான கவுசலை, சுமத்திரை, கைகேயி ஆகியவர்களை யாகப் புரோகிதர் களாகிய ஹோதா, அத்வர்யா, உச்சாதா ஆகிய ருத்விக்களுக்குத் தசரதன் தட்சணையாகக் கொடுத்தான். இந்தப் புரோகிதன் மூலம் இந்தப் பெண்களைக் கைப்பற்றி கூடித் திரிந்து அனுபவித்து விட்டுப் பிறகு அதற்காகக் கூலியோ, கிரயமோ தசரதனிடம் வாங்கிக் கொண்டு திருப்பிக் கொடுத்து விடுகிறார்கள். (இராமாயணம், பாலகாண்டம் - 14ஆவது சருக்கம்)
அதன் பிறகே தசரதனின் மனைவிகள் கர்ப்பவதிகளாகக் காணப்படுகிறார்கள்.... ஓ இப்படிப் பிறந்த ராமனுக்கா ‘துக்ளக்‘ வக்காலத்து வாங்குகிறது?
கேள்வி: திராவிடக் கழகங்கள் பிராமணர்களைக் குறி வைத்து தாக்குவது ஏன்?
பதில்: பிராமணர்கள் இல்லை என்றால் திராவிடமும் கிடையாது, திராவிடக் கழகங்களும் இருக்காது. அவர்கள் என்றென்றும் பிராமணர் களிடம் நன்றியுடன் இருக்க வேண்டும்
- துக்ளக் - 4.5.2022
நீ ஏன் பிராமணன்? நீ பிராமணன் என்றால் நாங்கள் சூத்திரர்கள் அல்லவா? சூத்திரன் என்றால் வேசி மக்கள் என்பதுதானே உங்களின் மனுதர்மம் (மனுதர்மம், அத்தியாயம் 8, சுலோகம் 415)
உண்மைதான். பிராமணன் என்ற நிலை இல்லை என்றால் சகமனிதனை மதிக்கும் மனிதனாக மாறி விட்டால் திராவிடர் கழகங்களுக்கு வேலை இல்லைதான். இதை உங்களின் லட்சுமிபுரம் யுவர் சங்கப் பார்ப்பனர் கூட்டத்திலேயே தந்தை பெரியார் நேருக்கு நேர் பேசினாரே.
குருமூர்த்தியாரே, குருமூர்த்தி யாரே, உங்கள் குருநாதர் திருவாளர் சோ ஆனந்த விகடன் பேட்டியில் (1.2.2012) “நான் பிராமணன் - அதுவும் இன்றைய பிராமணன் தான். அசல் பிராமணன் இல்லை.” என்று கூறியுள்ளரே. குரு நாதரே அசல் பிராமணர் இல்லை என்றால் - குருமூர்த்தி டூப்ளிக்கேட் தானே.
‘சூத்திரன்’ என்று இப்பொழுது சொல்லிப்பாரு பார்க்கலாம். திராவிடர் கழகங்களின் அருமையும், அவசியமும் இந்த இடத்தில்தானே இருக்கிறது.
No comments:
Post a Comment