தமிழ்நாட்டில் கல்வி, சுகாதார சேவையில் அரசு சிறப்பு கவனம் செலுத்துகிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 2, 2022

தமிழ்நாட்டில் கல்வி, சுகாதார சேவையில் அரசு சிறப்பு கவனம் செலுத்துகிறது

டில்லியில் பள்ளிகளை பார்வையிட்ட பின்பு முதலமைச்சர் மு.. ஸ்டாலின் பேட்டி

புதுடில்லி, ஏப்.2 தமிழ்நாட்டில் கல்வி மற்றும் சுகாதார சேவையில் அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது என டில்லியில் பள்ளிகளைப் பார்வையிட்ட பின் முதலமைச்சர் மு.. ஸ்டாலின் பேட்டியில் கூறியுள்ளார்.

டில்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.. ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை நேற்று (1.4.2022) நேரில் சந்தித்து பேசினார்.

இதனை தொடர்ந்து, டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை நேற்று சந்தித்துப் பேசியுள்ளார்.  இதன்பின்னர், டில்லியில் உள்ள பள்ளிக் கூடங் களுக்கு கெஜ்ரிவாலுடன் நேரில் சென்று, தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவற்றை பார்வையிட்டார்.  அந்த பள்ளி கூடங்களின் மாணவ, மாணவியருடன் உரையாடினார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், டில்லி அமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.  இதேபோன்று சமூக சுகாதார மய்யங்களாக செயல்பட்டு வரும் டில்லியில் உள்ள மொஹல்லா கிளினிக்குகளையும் அவர் பார்வையிட்டார்.

பொருளாதார அடிப்படை யில் பின்தங்கியபிரிவினர் பயன்பெறும் நோக்கில் இவை அமைந்துள்ளன.  இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், கல்வி மற்றும் சுகாதார சேவைகளில் தமிழ்நாடு அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.  தமிழ்நாட்டிலும் நவீன பள்ளிக்கூடங்களை உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

அதற்கான தொடக்க நிகழ்ச்சியில் டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கலந்து கொள்வார் என நான் உறுதியாக கூறுகிறேன்.  தமிழ்நாட்டு மக்களின் சார்பில் நான் அவரை அழைத்துள்ளேன் என கூறியுள்ளார்.

டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் பேட்டி

இதன்பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் டில்லியில் உள்ள எங்களுடைய பள்ளிகளுக்கும், மொஹல்லா கிளினிக்குகளுக்கும் வருகை தந்து அவற்றை பார்வையிட்டு உள்ளார்.  எங்களுடைய பள்ளிகளை அவர்களுக்கு காட்சிப்படுத்தியது எங்களுக்கு கிடைத்த கவுரவம் என்று கூறியுள்ளார்.


No comments:

Post a Comment