இங்கிலாந்து நாட்டின் தலைநகரமான லண்டனில் கிராய்டன் (Croydon) மாநக ராட்சியின் துணைமேயராக இருந்தவரும், சீரிய தொழிற் கட்சி செயல் வீரர்களில் ஒருவரும், திராவிடர் இயக்க தமிழ்மொழி உணர்வாளரும், பகுத்தறிவு வாதியுமான மானமிகு தோழர் மைக்கேல் செல்வநாயகம் (வயது 83) அவர்கள் ('மைக்' என்றே அவரை பலரும் அறிவர்) தனது உடல்நலக் குறைவு காரணமாக 23.4.2022 சனிக்கிழமையன்று லண்டன் நேரம் காலை 5.45 மணிக்குக் காலமானார் என்ற செய்தியை, ஆக்ஸ்போர்டு நகரில் வாழும் அவரது குடும்ப நண்பர் திருமதி சாரதா சேகர் அவர்கள் சென்னைக்கு - நமக்குத் தொலைபேசி வாயிலாக (24.4.2022) தெரிவித்தார்.
லண்டன் தமிழ்ச் சங்கத்தின் தற்போதைய தலைவர் நண்பர் அப்பு அவர் களும், அவரது மரணச் செய்தியை நம்மிடம் தெரி வித்தார்கள்.
மறைந்த செல்வநாயகம் அவர்கள் லண்டன் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்து - உழைத்த ஆரம்ப காலப் பொறுப்பாளர். நமக்கு பல ஆண்டு கால நண்பர்.
மறைந்த "பி.பி.சி. தமிழோசை சங்கர்" என்று அறியப்பட்ட சங்கரமூர்த்தி போன் றவர்களுடன் இணைந்து தமிழ்த் தொண்டு புரிந்தவர். மலேசியா, சிங்கப் பூரில் முன்பு அவர் வாழ்ந்தபோது அங்குள்ள பெரியார் பெருந் தொண்டர்கள் எஸ்.டி. மூர்த்தி, நாகரெத்தினம் போன்றோரின் நண்பர்.
தமிழ்நாட்டில் நம்மோடு எப்போதும் தொடர்பில் இருந்த தோழர்.
"ஜெர்மனியில் பெரியார் பன்னாட்டு அமைப்பு சார்பில் சில ஆண்டுகளுக்கு முன் "கி.வீரமணி சமூகநீதி விருதினை"ப் பெற்று அந்த ஒரு லட்சம் ரூபாய் நிதியை பெரியார் உலகத்துக்கே நன்கொடை யாக அளித்த பெரும் உள்ளத்தவர்.
அவரது மறைவு நமக்கு மிகப் பெரிய இழப்பு. தனியே இருந்த அவரை, நன்கு கவனித்த திருமதி ஹனிபா குடும்பத்தினருக்கு நமது நன்றி.
அவருக்கு வீர வணக்கம்.
No comments:
Post a Comment