புவனகிரி, ஏப். 29- ‘நீட்' தேர்வு எதிர்ப்பு - தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு - மாநில உரிமை மீட்பு - பரப்புரை பயண விளக்க தெருமுனைக் கூட்டம் 25.4.2022 திங்கள் மாலை 6 மணிக்கு புவனகிரியில் நடைபெற்றது.
மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் யாழ்.சுபா வரவேற் புரை யாற்றினார். மாவட்டத் தலைவர் பேரா. பூ.சி. இளங்கோவன் தலைமை யேற்றார். மாவட்ட மேனாள் அமைப்பாளர் கு.தென்னவன், புவனகிரி ஆசீர்வாதம் முன்னிலை யேற்றனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ப.க. செயலாளர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் கோவி.நெடுமாறன், வி.சி.க. நகர அமைப்பாளர் ச.செங்குட்டுவன், மே 17 இயக்கத் தோழர் மகேஷ், மாநில காங்கிரஸ் சொற் பொழிவாளர் கோ.மோகன் தாஸ், மாவட்ட இணைச் செயலாளர் யாழ்.திலீபன் ஆகியோர் உரையாற்றிய பின்னர், கழக சொற் பொழிவாளர் வழக்குரை ஞர் பூவை.புலிகேசி, நீட் தேர்வு எதிர்ப்பு, தேசிய கல்விக் கொள்கையால் ஏற்படும் தீமைகள், பி.ஜே.பி. அரசால் மாநில உரிமைகள் எவ்வாறு பறிக்கப்படுகிறது என் பதை பற்றியும் தமிழர் தலைவர் ஆசிரியர் தன் 90ஆவது வயதிலும் எவ்வாறு தன் வாழ்வை அர்ப்பணித்து, கடும் வெயிலிலும் இன உணர்விற் காக போராடுகிறார் என் பனவற்றையும் விளக்கி உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி தலைவர் அ.சுரேஷ், தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி நகர தலைவர் தாடி முருகன், ஒன்றிய த.வா.க. தலைவர் பாண்டியன் தி.மு.க. ஒன்றிய செயலர், தலைமைச் செயற்குழு உறுப்பினர் கீரை.வீர மணி, ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ. பாலபுஷ்பநாதன், தி.மு.க. ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தி.மு.க. நகர செயலா ளரும், பேரூராட்சி மன் றத் தலைவருமான பூக்கடை ந.கந்தன் உரையாற்றினார். இறுதியாக, மாவட்ட இளைஞரணித் தலைவர் அ.சுரேஷ் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment