இந்தியாவின் பழமையான துணை ராணுவப்படை அசாம் ரைபிள்ஸ். இதில் விளையாட்டு வீரர் ஒதுக்கீடு பணி யிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம்: கால்பந்து 20, குத்துச்சண்டை 21, படகுபோட்டி 18, வில்வித்தை 15, 'கிராஸ் கன்ட்ரி' 10, தடகளம் 10, போலோ 10 என மொத்தம் 104 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பிளஸ் 2.
வயது: 1.8.2022 அடிப்படையில் 18 - 23 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விளையாட்டு சான்றிதழ் : சர்வதேச, தேசிய, பல்கலை இடையே, பள்ளிகள் இடையேயான போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வு.
உயரம்: ஆண் 170 செ.மீ., பெண் 157 செ.மீ., இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி
விண்ணப்பக்கட்டணம்: ரூ.100. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 30.4.2022
விவரங்களுக்கு: www.assamrifles.gov.in/DOCS/NEWS/RALLY62.pdf
No comments:
Post a Comment