நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல்
கொழும்பு, ஏப். 27- வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்க வழி தெரியாத ராஜபக்சே சகோதரர்கள் அரசில் இருந்து விலக வேண்டும் என நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. தலைநகர் கொழும்புவில் அதிபரின் செயலகத்துக்கு எதிரே தன்னெழுச்சியாக நடந்து வரும் போராட்டம் 18 ஆவது நாளை எட்டியது.
இதைப்போல அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகிய இரு வரும் பதவி விலகக்கோரி எதிர்க்கட்சிகளும் போர்க் கொடி தூக்கி உள்ளன.
ஆனால் பதவி விலகும் கோரிக்கையை நிராக ரித்து வரும் ராஜபக்சே சகோதரர்கள், பொருளா தார நெருக்கடியை எதிர் கொள்வதற்காக பன் னாட்டு நாடுகள் மற்றும் உலக வங்கி போன்றவற் றின் உதவியை நாடி வரு கின்றனர்.
எனவே இலங்கை அர சுக்கு எதிராக நாடாளு மன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்ட மிட்டு உள்ளன. இதற் காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து வந்த தலைவர்கள், தற்போது அதற்கான ஆதரவை திரட் டியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து மேனாள் எரிசக்தி துறை அமைச்சர் உதய கம்மன்பில செய்தி யாளர்களிடம் கூறுகை யில், ‘அரசில் இருந்து வெளியேறிய நாடாளு மன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதான எதிர்க் கட்சியான சமாகி ஜன பலவேகயா (எஸ்.ஜே.பி.), மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுனா மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவால் நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெறும்’ என தெரிவித்தார்.
நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வெற்றி யடையச்செய்வதற்கு தேவையான 113 உறுப்பி னர்களின் ஆதரவு கிடைக் கும் வரை எஸ்.ஜே.பி. கட் சியை காத்திருக்குமாறு கூறியதாக தெரிவித்த கம் மன்பில, தற்போது தங்க ளுக்கு 120 உறுப்பினர்க ளின் ஆதரவு கிடைத்தி ருப்பதாகவும் தெரிவித்தார்.
எனவே ராஜபக்சே அரசுக்கு எதிரான நம் பிக்கை இல்லா தீர்மானம் விரைவில் நாடாளுமன் றத்தில் தாக்கல் செய்யப் படும் என்றும் அவர் கூறினார்.
ராஜபக்சே அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரு வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதர வுகளை பெற்று வந்த எஸ்.ஜே.பி. கட்சி, போது மான ஆதரவு கிடைக்காத தால் அதை கிடப்பில் போட்டிருந்ததாக கூறப் படுகிறது.
இதற்கிடையே இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வரும் புத்த மத தலைவர்களுக்கு அதிபர் கோத்தபய ராஜ பக்சே கடிதம் எழுதியுள் ளார். அதில், மத தலை வர்களின் அறிவுரையை தான் மதிப்பதாகவும், அதேநேரத்தில் அரசு அமைப்பில் ஏதாவது மாற்றம் கொண்டு வர விரும்பினால் அது அர சியல் சாசன வழிமுறை களின் படி மட்டுமே மேற் கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
இலங்கையில் இடைக் கால அரசு அமைக்க ராஜபக்சே ஒப்புக்கொண் டதாக புத்த மதத்தலைவர் கள் கூறியிருந்த நிலையில், இந்த கடிதத்தில் அது குறித்து நேரடியாக எந்த குறிப்பையும் ராஜபக்சே எழுதவில்லை.
அதேநேரம் ஒற்றுமை அரசை அமைக்க எதிர்க் கட்சிகள் முன்வராத நிலையில், இலங்கையில் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட அமைச்சரவை அமைத்திருப்பதாக கூறியுள்ளார்.
No comments:
Post a Comment