சென்னை, ஏப்.1 சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள வானகரம் மற்றும் சூரப்பட்டு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் இன்று (1.4.2022) முதல் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது.
நாடுமுழுவதும் பல்வேறு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
சென்னை புறநகரில் உள்ள சூரப்பட்டு, வானகரம் சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை ரூ.10 முதல் ரூ.40 வரை அதிகரித்து ஒன்றிய அரசின் நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வானகரம் சுங்கச்சாவடியில் ஒருமுறை சென்று வரக்கூடிய கார், ஜீப், வேன்களுக்கு ரூ.45இல் இருந்து ரூ.50 ஆகவும், ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.65இல் இருந்து ரூ.75 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபேல, சூரப்பட்டு சுங்கச்சாவடியில் ஒருமுறை சென்று வரக்கூடிய கார், ஜீப், வேன்களுக்கு ரூ.60இல் இருந்து ரூ.70 ஆகவும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கு ரூ.90இல் இருந்து ரூ.100 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை புறநகரில் உள்ள வானகரம், பரனூர், சூரப்பட்டு, சென்னசமுத்திரம், நெமிலி ஆகிய 5 சுங்கச்சாவடிகளை அகற்றுமாறு ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு அண்மையில் கோரிக்கை விடுத் திருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment