பயணங்கள் முடிவதில்லை - லட்சிய அறப்போர்கள் ஓய்வதில்லை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 3, 2022

பயணங்கள் முடிவதில்லை - லட்சிய அறப்போர்கள் ஓய்வதில்லை!

சமூகநீதிக் கொடி தலைதாழாது பறப்பதற்காகவே குமரி தொடங்கி - சென்னைவரை எங்களது பிரச்சார பயணம்!

மக்கள் மன்றம்தானே இறுதியாக முடிவெடுக்கும் அறவாயில்!

பலதரப்பு மக்களின் ஆதரவு - வரவேற்பு உற்சாகம் அளிக்கிறது!

சமூகநீதிக் கொடி தலைதாழாது பறப்பதற் காகவே குமரி தொடங்கி - சென்னைவரை எங் களது பிரச்சார பயணம்! மக்கள் மன்றம்தானே இறுதியாக முடிவெடுக்கும் அறவாயில்! பயணங்கள் முடிவதில்லை - லட்சிய அறப்போர்கள் ஓய்வதில்லை! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத் துள்ளார். அறிக்கை வருமாறு.

எமதருமைக் கொள்கை உறவுகளே, பகுத்தறிவா ளர்களே, இன உணர்வாளர்களே, சமூகநீதிக்கான ஆதரவுப் பெருமக்களே!

நீட்' தேர்வு என்ற பலி பீடம் மருத்துவப் படிப்பு விழையும் நம் மாணவக் கண்மணிகளுக்கு உயிர்க் கொல்லியாய் இன்னமும் நமக்கு நீடிக்கிறது!

சட்ட முறையில் போராடி வருகிறது!

இந்த நிலைப்பாட்டை ஏற்று தேர்தலில் சமூகநீதிக் கான சரித்திர நாயகராம் மு..ஸ்டாலின் அவர்களை முதலமைச்சராய் கொண்ட ஆட்சியை மக்கள் தேர்வு செய்து, அவ்வாட்சியும் இந்தநீட்' தேர்வு, ஒன்றிய அரசின் நவீன குலதர்மக் கல்விக் கொள்கை, எல்லா கல்லூரி, பல்கலைக் கழகப் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வுகள் என்றகண்ணிவெடி'களை வைத்து, நமது பிள்ளைகளின் கல்விக் கண்ணையும், வாழ்வையும் பறிக்கும் அபாயம் குறித்தும் எதிர்ப்பு தெரிவித்து சட்ட முறையில் போராடி வருகிறது!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இருமுறை இந்தநீட்' தேர்வுக்கான விதிவிலக்குக் கோரும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பப்பட்டதில், இரண்டாவது முறையும் - அரச மைப்புச் சட்டப்படி கடமையாற்றாமல், வேண்டுமென்றே அரசியலை - போராட்டக் களமாக்கிட அவர் கால்கோள் விழா நடத்திப் பார்க்க முனைகிறார்.

இந்த நிலையில், ஒரே தீர்வு நம் மக்கள்தான் - மக்களின் எழுச்சி - விழிப்புணர்வுதான்.

சமூகநீதிக் கொடி தலைதாழாது பறப்பதற்காகவே பிரச்சார பயணம்!

நாம் இதில் அறவழியில், ஆட்சியின் நிலைப்பாட்டிற்கு பேராதரவை திரட்டிடவே - நம் பிள்ளைகளின் கல்வி வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு, சமூகநீதிக் கொடி தலைதாழாது பறப்பதற்காகவே குமரி தொடங்கி - திருத்தணி - சென்னை வரை ஒரு பெரும் பயணத்தை இன்று (3.4.2022) தொடங்குகிறோம்!

கொளுத்தும் வெயில் கோடைதான் - இதைப் பார்த்தால், ஒதுங்கினால் நம் கல்வி ஓடையில் புகுந்து மாணவர்களை விழுங்கத் துடிக்கும் ஆரிய முதலைகளை விரட்டுவது முடியுமா?

மக்கள் மன்றம்தானே இறுதியாக முடிவெடுக்கும் அறவாயில்!

எனவேதான்,  குடிசெய்வார்க்கில்லை பருவம்' என்று புறப்பட்டுள்ளோம் - மக்கள் மன்றம்தானே இறுதியாக முடிவெடுக்கும் அறவாயில் - எனவேதான் இப்பயணம்! உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது!

திராவிடர் கழகம் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் பற்பல முற்போக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், கல்வி யாளர்களும் நமக்குத் தொலைப்பேசிமூலமும், கடிதங் கள்மூலமும் தரும் ஊக்கம் குறைவற்ற உற்சாகத்தைத் தருகிறது!

முன்பு நுழைவுத் தேர்வை எதிர்த்து ஓராண்டல்ல, ஈராண்டல்ல, 20 ஆண்டுகளுக்குமேல் போராடி வெற்றி கண்ட வரலாறு நமக்கு உண்டு - தி.மு..வுக்கு உண்டு.

எனவேதான் தோழர்களே, தவிர்க்கப்படக் கூடாத தாக இப்பெரும் பயணம் உள்ளது!

பயணங்கள் முடிவதில்லைலட்சிய அறப்போர்கள் ஓய்வதில்லை!

நமது இயக்கத்திற்குக் கண்ணுக்குத் தெரிந்த உறுப் பினர்களைவிட, கண்ணுக்குத் தெரியாத - பேராதரவா ளர்கள் - அனைத்துக் கட்சியினர் - கட்சிகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் பலர் உண்டு. அவர்களது பேரா தரவு கண்டு நம் முன்னே உள்ள கோடைக் கொடுமை, பயண அசதிகள் பனிபோல் கரைந்து போகும் என்பது உறுதி! உறுதி!!

பயணங்கள் முடிவதில்லை -

லட்சிய அறப்போர்கள் ஓய்வதில்லை!

நன்றி! நன்றி!!

 கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

3.4.2022              

No comments:

Post a Comment