ஈரோடு வருகை தரும் தமிழர் தலைவர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 1, 2022

ஈரோடு வருகை தரும் தமிழர் தலைவர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

 ஈரோடு, ஏப். 1- 28.3.2022 அன்று மாலை 04:00 மணிக்கு  ஈரோடு பெரியார் மன்றத்தில்  ஈரோடு-கோபி கழக மாவட்ட நிர்வா கிகள் கலந்துரையாடல் கூட் டம் ஈரோடு மாவட்ட  கழகச் செயலாளர்.மா.மணிமாறன் தலைமையில்  நடைபெற்றது.

கூட்டத்தில்  19.4.2022 அன்று ஈரோட்டிற்கு வருகை தரும்  தமிழர் தலைவர் அவர் களுக்கு உற்சாக வரவேற்பு அளித்து,ஈரோட்டில் நடை பெறும் ஆசிரியர் அவர்களின்  நீட் எதிர்ப்பு -புதிய கல்வி கொள்கை எதிர்ப்பு -மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணக்கூட்டம்  மக்க ளுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்தி தமிழ்நாடு அரசியலில் திருப்பு முனையாக இருக்கும் வகையில் ஏற்பாடு செய்ய  கழக நிர்வா கிகள் கலந்துரையாடல் கூட் டத்தில் முடிவு.

கழக பொதுச் செயலாளர் தஞ்சை. இரா.ஜெயக்குமார் மற்றும்  கழக மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு..சண் முகம் ஆகியோர் ஆசிரியர் அவர்களின் பரப்புரை பெரும் பயணத்தின் தேவை,மற்றும் நோக்கம்,மேலும் கூட்ட முன் னேற்பாடுகள் குறித்து கருத் துரை வழங்கினர்.

கூட்டத்தில் மாநிலம் முழு வதும் தமிழர் தலைவர் அவர் களின் பரப்புரை பெரும் பயண கூட்ட முன்னேற்பாடுகளை குறித்து கழக  கலந்துரையாடல் கூட்டத்தை சிறப்பாக நடத்தி ஈரோடு வருகை தந்த கழக பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமாரின் பெரும் பணியை பாராட்டி கோபி கழக மாவட்டத்தின் தலைவ ராக புதிதாக நியமிக்கப்பட்ட  .சிவலிங்கம் கழக பொதுச் செயலாளருக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.

நிறைவேற்றப்பட்ட. தீர்மானங்கள்

தீர்மானம். 1.

இரங்கல் தீர்மானம்:- 27:03:2022 அன்று மறைவுற்ற கோவை மாவட்ட கழக தலை வர் .சந்திரசேகரன் அவர்க ளின் தந்தை மருதநாயகம் அவர்களின் மறைவுக்கு இக் கூட்டம் தனது ஆழ்ந்த இரங் கலையும் வீரவணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறது.

தீர்மானம்:2.

19:03:2022 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக தீர்மானங் களை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம்:3.

நீட் தேர்வு எதிர்ப்பு-புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு-மாநில உரிமை மீட்பு ஆகிய முழக்கங்களை முன்னிறுத்தி ஏப்ரல் 3ஆம் தேதி நாகர்கோ விலில் தொடங்கி ஏப்ரல் 25 சென்னை வரை பரப்புரை பயணம் மேற்கொண்டு ஏப்ரல் 19 அன்று ஈரோடு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்களுக்கு மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாபெரும் வரவேற்பு அளிப் பது எனவும், ஏப்ரல் 19 ஈரோட்டில் பொதுக்கூட் டத்தை எழுச்சியுடன் நடத்து வது எனவும் முடிவு செய்யப் படுகிறது.

கூட்டத்தை மக்கள் மத்தி யில் விளம்பரப்படுத்தும் வகை யில், சுவரெழுத்து, சுவரொட்டி, உள்ளூர் தொலைக்காட்சிக ளில் விளம்பரம், பதாகைகள், நிதி வசூல், ஒலிபெருக்கி விளம் பரம் உள்ளிட்ட அனைத்தை யும் கழகத் தோழர்கள் ஒன்றி ணைந்து மிக சிறப்பாக செயல் படுத்துவது என தீர்மானிக் கப்படுகிறது.

தீர்மானம்:4.

ஏப்ரல்,மே மாதங்களில் ஒன்றிய மற்றும் கிளை கழகங் களின் கலந்துரையாடல் கூட் டங்களை நடத்தி கழக அமைப் புகளை புதுப்பிப்பது. மாவட் டம் முழுவதும் பரவலாக தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது.ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் (சனி ஞாயிறு) பெரியாரியல் பயிற்சி வகுப்புகளை வாய்ப்புள்ள இடங்களில் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம்:5.

தந்தை பெரியார் அவர் களின் சிந்தனைகள் அடங்கிய புத்தகங்களை உலக மக்கள் அறிந்திடும் வகையில் இந்திய மற்றும் உலக மொழிகளில் மொழி பெயர்த்து பரப்பிட 5 கோடி ரூபாய் நிதியை தமிழ் நாடு அரசு நிதிநிலை அறிக் கையில் ஒதுக்கி பெரியார் உலக மயம்,உலகம் பெரியார் மயம் என்ற சாதனை படைத்துள்ள சமூக நீதியின் சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களுக்கு ஈரோடு மாவட்ட திராவிடர் கழகம் பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

கூட்டத்தில் .சிவலிங்கம் (கோபி கழக மாவட்டம்), பேராசிரியர். .காளிமுத்து, இரா.நற்குணன்(பொதுக்குழு உறுப்பினர்),.கிருட்டிண மூர்த்தி,கோ.திருநாவுக்கரசு, தே.காமராஜ்(மாநில இளைஞ ரணி துணைச் செயலாளர்), பி.என்.எம்.பெரியசாமி (பெரியார் படிப்பக வாசகர் வட்டம்),சா.ஜெபராஜ் செல் லத்துரை (மண்டல இளைஞ ரணி செயலாளர்),.அசோக் குமார் (பவானி ஒன்றிய தலை வர்), கெ.தட் சிணாமூர்த்தி, .டேவிட்,.சத்தியமூர்த்தி, தனமேநீ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment