தருமபுரியில் சிறப்பாக நடத்த மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
தருமபுரி, ஏப்.1 தருமபுரி மாவட்டத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 26.3.2022 சனிக்கிழமை காலை 11 மணி அளவில் தருமபுரி பெரியார் மன்ற அரங்கில் நடைபெற்றது.
கலந்துரையாடல் கூட்டத்திற்கு மாவட்ட கழகத் தலைவர் மு.பரமசிவம் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் மு.யாழ்திலீபன் கடவுள் மறுப்பு கூறி வரவேற்புரையாற்றினார். மாநில கலைத் துறை செயலாளர் மாரி. கருணாநிதி, மண்டலக் கழகத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன், மாவட்ட துணைத்தலைவர் புலவர் இரா. வேட் ராயன், அரூர் பகுத்தறிவாளர் கழக தலைவர் சா.இராஜேந்திரன், மாவட்ட இணைச் செயலாளர் பீம.தமிழ் பிரபாகரன், நகர தலைவர் கரு.பாலன் ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.
நாகர்கோயிலில் தொடங்கி சென்னை வரை நடைபெறும் நீட் எதிர்ப்பு, மற்றும் புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணத்தை ஏப்ரல் 21ஆம் தேதி தரும புரியில் சிறப்பாக நடத்துவது குறித்து திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன் முன்னுரை ஆற்றினார். பிரச்சார பெரும் பயணத்தில் வெற்றி பெற சுவரெழுத்து பணி, துண்டறிக்கை விநியோகம், சுவரொட்டி, அனைத் துக் கட்சித் தோழர்கள் உடன் தொடர்பு கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வைப்பது, பயணத்தில் பங்கு பெறும் தோழர்களுக்கு தங்கும் வசதி, உணவு ஏற்பாடுகளை சிறப்பாக செய்வது,மேடை, ஒலி பெருக்கி, கழக கொடிகளை கட்டுவது, குறித்து பிரச்சார பெரும்பயண திட்டத்தை விளக்கி கழக மாநில அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமன் வழிகாட்டுதல் உரை நிகழ்த்தினார்.
தீர்மானங்கள்
மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:
வருகிற 21.4.2022 அன்று நீட் தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு,மாநில உரிமை மீட்பு பரப்புரை தொடர் பிரச்சார பயணமாக தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தரும் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது எனவும், தோழமை கட்சியினரை பங்கேற்க வைத்து பிரச்சாரக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
பொதுச் சாலையை யார் ஆக்கிரமித்து கட்டிய கோவில் என்றாலும் கூட அந்த சட்டவிரோத செயலை தடுக்க வேண்டும். சாலையில் கட்டு மானம் எழுப்பி அந்த சாலையை பொதுமக்கள் பயன்படுத்துவதை தடுத்தால் உடனடியாக அதை அகற்றவேண்டும், கோவில் பெயரில் அல்லது ஒரு சிலையை வைத்து பொது இடத்தை ஆக்கிரமித்து கொள்ளலாம் என்பது தனிப்பட்ட சிலரின் மனப் பான்மையாக உள்ளது, யார் எந்த பெயரில் ஆக்கிரமிப்பு செய்கின்றனர் என்பதை நீதிமன்றங் கள் பார்ப்பதில்லை.
கடவுளே பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய் தாலும் அந்த ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றங்கள் உத்தரவிடும், ஏனென்றால் பொதுநலன் சட்டவிதிகள் பாதுகாக்கப்படவேண்டும். கடவுள் பெயரில் ஆக்கிரமிப்பு செய்து கோயில் கட்டி நீதிமன்றங் களை ஏமாற்ற முடியாது. பொது இடத்தை ஆக்கிரமித்து புதிதாக கோயில் கட்டும்படி எந்த கடவுளும் கூறவில்லை. எனவே இரண்டு மாதங் களில் கட்டுமானம் முழுவதையும் அகற்ற வேண்டும் தவறினால் நகராட்சி அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பினை தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம் வரவேற்று மகிழ்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகளுக்கு பயனடை அணிவித்து வாழ்த்து தெரிவித்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, வெற்றிபெற்ற நகராட்சி பேரூராட்சி பிரதிநிதிகளுக்கு மாவட்ட கழகம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவுலக ஆசான் தந்தைப் பெரியாரின் சிந்தனையை பரப்பும் வகையில் 21 மொழிகளில் 5 கோடி ரூபாய் செலவில் பெரியார் புத்தகங்களை மொழிபெயர்ப்பு செய்யும் திட்டத்தை கலந்துரையாடல் கூட்டம் வரவேற்று சமூகநீதி சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியையும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
நன்கொடை அறிவித்தோர்
பிரச்சாரப் பயணம் வெற்றி பெற தமிழ் பிரபாகரன் ரூபாய் 2000,வேட்டராயன் 5000, கரு.பாலன் 100 சுவரொட்டிகள், கு.சரவணன் 1000, சி.காமராஜ் 2000, கோ.தனசேகரன் 2000, அ.தமிழ்ச்செல்வன் 1000, சிறீதரன் 100, ஆனந்தன் 200, இரா.கிருஷ்ணமூர்த்தி 5000, அரூர் சா.இராஜேந்திரன் 10,000 ரூபாய் மற்றும் அரூர் நகரில் சுவரெழுத்துப் பணி, வாகனச் செலவு என செய்து கொடுப்பதாக ஏற்றுக்கொண்டார்.
பங்கேற்றோர்
மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர். தமிழ்ச்செல்வி, மண்டல பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர் இரா. கிருஷ்ணமூர்த்தி, திராவிட தமிழர் பேரவை மாவட்டத் தலைவர் ராவணன், மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் சி.காமராஜ், மாவட்ட தொழிலாளர் அணி செய லாளர் பெ.கோவிந்தராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் அர.ஆனந்தன், மாவட்ட இளைஞரணி செயலாளர் மு.சிறீதரன், கடத்தூர் விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.தனசேகரன், தருமபுரி மண்டல திராவிடர் கழக மாணவர் கழக செயலாளர் மா.செல்லதுரை, தஞ்சை மண்டல மாணவர் கழக செயலாளர் சற்குணம், தஞ்சை மாவட்ட தொழிலாளர் அணி சந்துரு மாவட்ட துணை கு.சரவணன் ராவணன், சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment