பெங்களூரு, ஏப். 2- கடந்த ஆண்டில், கரோனா தாக்கத் தினால், மருத்துவ காப்பீடு கோரல்களின் எண்ணிக்கை, 257 சதவீதம் அதிகரித்துள் ளதாக, ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
தனியார் பொது காப்பீட்டு துறையை சேர்ந்த, ‘டிஜிட்’ காப்பீடு, அந்நிறுவன தரவுகளின் அடிப்படையிலான ஆய் வறிக்கையில் மேலும் தெரிவித் துள்ளதாவது: மருத்துவ காப்பீடு கோரல்களின் எண்ணிக்கை, 2021ஆம் ஆண்டில், 3.5 மடங்கு அதிகரித்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டில் ஏற்பட்ட முதல் அலையால் மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதை விட, 2021இல், ‘டெல்டா’ பாதிப்பினால் அதிகம் பேர் அனுமதிக்கப் பட்டனர். இதனால், 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2021இல், கோரல்களின் எண்ணிக்கை 257 சதவீதம் உயர்ந்து உள்ளது.
மேலும், 2021இல், மெட்ரோ அல்லாத பகுதிகளில் பதிவான கோரல்களின் எண்ணிக்கை, 17 சதவீதம் உயர்ந்துள்ளது. இது, மெட்ரோ அல்லாத பகுதிககளிலும் மருத்துவ காப்பீடு எடுத் துக் கொள்வது அவசியம் என்பதை உணர்த்துவதாக இருக் கிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment