ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் எல்லை சாலை கழகத்தில் (பி.ஆர்.ஓ.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம் : மல்டி ஸ்கில்டு வொர்க்கர் பிரிவில் மேசன் 147, நர்சிங் அசிஸ்டென்ட் 155 என மொத்தம் 302 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : மேசன் பிரிவுக்கு பிளஸ் 2வுக்குப்பின் பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் தொடர்பான பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். நர்சிங் பிரிவுக்கு பிளஸ் 2வில் பயாலஜி, ஓராண்டு ஏ.என்.எம்., படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது : 23.5.2022 அடிப்படையில் மேசன் 18 - 25, நர்சிங் 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை : இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : Commandant GREF Centre, Dighi camp, Pune- 411 015.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.50. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள் : 23.5.2022
விவரங்களுக்கு : http://bro.gov.in/index2.asp?slid=6355&sublinkid=1819&lang=1
No comments:
Post a Comment