இலங்கை பிரதமர் வீடு சுற்றிவளைப்பு மாணவர்கள் அதிரடி போராட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 27, 2022

இலங்கை பிரதமர் வீடு சுற்றிவளைப்பு மாணவர்கள் அதிரடி போராட்டம்

கொழும்பு, ஏப். 27- இலங்கை அதிபர், பிரதமர் ஆகியோர் பதவி விலகக்கோரி நேற்று 16ஆவது நாளாக போராட்டம் நீடித்தது. இடைக்கால அரசு அமைக்கும் கோரிக்கையை பிரதமர் மகிந்த ராஜபக்சே நிராகரித்தார்.

இந்தநிலையில், கொழும்பு நகரில் விஜேரமா மவாத்தா பகுதியில் உள்ள மகிந்த ராஜபக்சே இல்லத்தை பல்கலைக் கழக மாணவ கூட்டமைப்பு சார்பில் பங்கேற்ற ஆயிரக் கணக்கான மாணவர்கள் சுற்றி வளைத்தனர். காம்பவுண்டு சுவர் மீதும் ஏறினர். ‘வீட்டுக்கு போ, ராஜபக்சே’ என்று சுவரில் எழுதினர்.

மலைப் பகுதியில் இருந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த மலையக தமிழர்கள் கொழும்புக்கு வந்து காலிமுக பகுதியில் போராட்டத்தில் கலந்து கொண்டனர். காவல் துறையினர் கொழும்பு நகரில் பல சாலைகளில் தடுப்பு களை வைத்திருந்தனர். அந்த தடுப்புகளை மனித உரிமை ஆணைய அதிகாரிகள் பார்வையிட்டனர். போராட்டக் காரர்கள் நுழையக்கூடாது என்பதற்காக நீதிமன்ற உத்தர வின் பேரில் தடுப்பு வைத்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment