ஆவடி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம்!
ஆவடி, ஏப். 1- தலைமை செயற்குழுவில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங் களை நடைமுறைப்படுத் தும் விதமாக மாவட்டக் கலந்துரையாடல் கூட் டம், மாவட்டச் செயலா ளர் க.இளவரசன் தலை மையில் நடைபெற்றது.
ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஆவடி பெரியார் மாளி கையில் 27-.3.-2022 ஞாயிற் றுக்கிழமை மாலை 4 மணி அளவில் மாவட்டக் கலந்துரையாடல் கூட் டம் நேரில் நடைபெற்றது. இதில், 19.3.-2022 அன்று சென்னை பெரியார் திட லில் நடைபெற்ற தலைமை நிலைய செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்பு போன்ற தீர்மா னங்களை விளக்கி தெரு முனைக் கூட்டங்கள் நடத்துவது, ஆவடி பெரியார் மாளிகையில் வாரம் ஒருமுறை ஜிழிறிஷிசி வகுப்புகளை நடத்துவது, வைரஸ் தொற்று காரண மாக நின்று போயிருந்த உண்மை வாசகர் வட்டம் நிகழ்ச்சியை மறுபடியும் நடத்துவது, ஆவடி மாந கராட்சியின் மேயர், துணை மேயர் ஆகி யோரை நேரில் சந்தித்து பாராட்டி வாழ்த்துத் தெரிவிப்பது, புதிதாக இயக்கத்தில் இணைந்த ந.வீரமணி, மாரி கார்த் தீஸ் ஆகியோரை வர வேற்பது போன்ற தீர் மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. பிரச்சாரக் கூட்டங்கள் மாவட்டக் கழகம், மக ளிர் அணி, மகளிர் பாசறை, மாணவர் அணி, பகுத்த றிவாளர் கழகம் போன்ற அமைப்புகளின் சார்பில் தெருமுனைக் கூட்டங் கள் நடத்துவதாக தீர் மானிக்கப்பட்டது குறிப் பிடத்தக்கது.
நிகழ்வில் மகளிர் பாசறை மாநில அமைப் பாளர் சே.மெ.மதிவதனி, சி.அமலசுந்தரி, மாவட் டப் பொறுப்பாளர்கள் அமைப்பாளர் உடுமலை வடிவேல், இளைஞரணித் தலைவர் வெ.கார்வேந் தன், துணைத்தலைவர் வை.கலையரசன், ஆவடி நகரத் தலைவர் கோ.முரு கன், அம்பத்தூர் பகுதித் தலைவர் பூ. இராமலிங் கம், எ,கண்ணன், திருமுல் லைவாயில் அருள்தாஸ், இரவீந்திரன், அ.சங்கர், பூவை வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண் டனர். முன்னதாக ஆவடி நகரச் செயலாளர் இ.தமிழ் மணி கடவுள் மறுப்புக் கூறினார். பூவை அன்புச் செல்வி நன்றி கூறி நிகழ்வை நிறைவு செய்தார்.
No comments:
Post a Comment