துவரம் பருப்பை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதினால் உடலின் தசைகளில் இருக்கும் கொழுப்புகளை கரைத்து உடல் எடையைக் குறைப்பதில் பேருதவி புரிகிறது.
நடுத்தர வயது மனிதர்களுக்கு ரத்த அழுத்தம் ஒரு முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. துவரம் பருப்பில் உள்ள பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. இது இரத்த குழாய் விரிப்பானாகச் செயல்பட்டு இரத்த ஓட்டத்தை சீராக நடைபெறச் செய்கிறது. இதனால் இரத்த அழுத்தம் குறைந்து, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எனவே ரத்த அழுத்த பிரச்சினை தீர அடிக்கடி உணவில் துவரம் பருப்பை சேர்த்துக் கொள்வது அவசியம். குழந்தைகள் மற்றும் கடுமையான உடல் உழைப்பை கொண்டவர்கள் துவரம் பருப்பை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும்.
வளரும் நாடுகளில் பிறக்கும் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஒரு குறைபாடாக குருதிச் சோகை இருக்கிறது. குருதியில் ஃபோலேட்டுகளின் குறை பாட்டினால் குருதிச் சோகை ஏற்படுகிறது. துவரம் பருப்பில் அபரிதமான ஃபோலேட் டுகள் இருக்கின்றன. எனவே வளரும் நாடுகளில் குழந்தைகளிடம் காணப்படும் அனீமியா எனப்படும் குருதிச் சோகைக்கு துவரம் பருப்பு ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது.
எதிர்பாராதவிதமாக அடிபடும் போது சிலருக்கு உடலில் அடிபட்ட பகுதிகளில் வீக்கம் ஏற்படுகின்றன. மேலும் இது தீவிரமடைந்து அழற்சியும் உண்டாகிறது. துவரையில் உள்ள கனிமச்சத்துக்கள் வீக்கத்தைக் குறைப்பதோடு எதிர்ப்பு அழற்சி தன்மையையும் அதிகம் கொண்டுள்ளன. மேலும் அடிபட்ட இடத்தில் உண்டாகும் வீக்கம் மற்றும் குருதிக் கட்டிற்கு துவரம் பருப்பை அரைத்துப் போடுவதால் வீக்கம் விரைவில் குறையும்.
எத்தகைய நோய்களும் நம்மை அணுகாமல் இருக்க நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும். துவரையில் உள்ள வைட்டமின் சி சத்தானது, உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. இது குருதி வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, ஆன்டிஆக்சிஜன்டாக செயல்பட்டு உடல்நலத்தை மேம்படுத்துவதோடு நோய் எதிர்ப்பாற்றலையும் அதிகரிக்கிறது.
துவரம் பருப்பில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து, குறைந்தளவு கொழுப்புச்சத்து ஆகியவை இதயநலத்தை மேம்படுத்துகிறது. பொட்டாசியம் குருதி அழுத்தத்தைச் சீராக்குகிறது. நார்ச்சத்து கொழுப்பு சேகரமாவதைத் தடுக்கிறது. எனவே துவரம் பருப்பை அடிக்கடி சாப்பிடுவதால் இதய நலம் மேம்பட்டு, ஆயுளை அதிகரிக்கிறது.
நாம் உண்ணும் உணவை நன்கு செரிமானம் செய்யும் சக்தி நமக்கு இருக்க வேண்டும். துவரம் பருப்பில் உள்ள நார்ச்சத்து உணவை நன்கு செரிமானம் செய்ய உதவுகிறது. மேலும் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி வெளியேற்றவும் நார்ச்சத்து உதவுகிறது. வயிற்றுப்போக்கு, வாந்தி, மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமானம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது.
No comments:
Post a Comment