ஏட்டு திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 9, 2022

ஏட்டு திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

*ஆங்கிலம், இந்தி குறித்த அமித்ஷாவின் கருத்து இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.!

 இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மாநிலங்களின் இணைப்பு மொழியாக இந்தி இருக்க வேண்டும் என கூறிய அமித்ஷாவின் கருத்தை, கர்நாடக மாநிலத்தின் 6.5 கோடி கன்னடர்களில் ஒருவனாக கடுமை யாக கண்டிக்கிறேன என சித்தராமைய்யா பேச்சு. திரிணா முல் காங்கிரஸ், காங்கிரஸ் என எதிர்க்கட்சிகளும் அமித் ஷாவின் ஹிந்தி திணிப்புக் கூற்றுக்கு எதிராக கண்டனம்.

* பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிரான கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். அவை எவ்வாறு ஒன்றிணைய வேண்டும், அதன் செயல்பாடுகள் எப்படி கட்டமைக்கப்பட வேண்டும் என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது, என்று டில்லியில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் சரத் யாதவை சந்தித்தபின் காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் பேட்டி அளித்தார்.  

* ஹிந்துக்கள் நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையேல், ஹிந்து மக்கள் தொகை குறைந்து விடும் என சர்ச்சைக்குரிய பேச்சினால் கைது செய்யப்பட்டு பிணையில் வந்துள்ள யோகி நரசிங்கானந்த் மீண்டும் சர்ச்சை பேச்சு.

 - குடந்தை கருணா

No comments:

Post a Comment