வல்லம், ஏப். 27 -யூத் ஸ்போர்ட்ஸ் புரோமோஷன் அசோசியேஷன் ஆப் தமிழ்நாடு நடத்திய மாநில அளவிலான விளையாட்டு போட் டிகள் (குழு- தடகளம்) பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல் கலைக்கழகத்தில் 17.04.2022 அன்று நடைபெற்றது.
இதில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவ, மாணவி கள் (ளிஜீமீஸீ tஷீ ணீறீறீ) அனைத்து பிரிவினர்கள் போட்டிகளில் கால் பந்து, கபடி, கூடைப்பந்து, இறகு பந்து, குத்துச்சண்டை, வில்வித்தை ஆகிய போட்டிகளில் முதலிடத் தினையும் கையுந்து பந்து, இறகு பந்து, வில்வித்தை, குத்துச்சண்டை போட்டிகளில் இரண்டாமிடத் தினையும் தடகள போட்டிகளில் 22 (தங்கம், வெள்ளி, வெண்கலம்) பதக்கங்களை பெற்று வெற்றி வாகை சூடினார்கள்.
பல்கலைக்கழகம் அனைத்து பிரிவினர்கள் போட்டிகளில் ஒட்டு மொத்த வாகையர் பட்டத்தினை பெற்று பல்கலைக்கழகத்திற்கு பெருமை சேர்த்தனர்.
இவர்களை பாராட்டி பல் கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் செ.வேலுசாமி, பதிவா ளர் பி.கே.சிறீவித்யா, கல்விபுல முதன்மையர்கள் - பேராசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் முனைவர் ரமேஷ் ஆகியோர் பாராட்டினார்கள்.
No comments:
Post a Comment