டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மத உணர்வைத் தூண்டும் வெறுப்பு அரசியலுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் கடுமையான நடவடிக்கை எடுப்பது வரவேற்கத்தக்கது என்கிறது தலையங்க செய்தி.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதாவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். மசோதா நிறைவேறியபின் பல்கலைக்கழக வேந்தராக ஆளுநருக்குப் பதில் முதலமைச்சர் பதவி வகிப்பார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பின் பலனை தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் வழங்க வில்லை என்ற பிரதமர் மோடியின் குற்றச்சாட்டிற்கு தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், செஸ் மற்றும் கூடுதல் கட்டணத்தை ஒன்றிய அரசு நீக்க வேண்டும் என பதிலளித்துள்ளார்.
* கோவிட் மறுஆய்வுப் பிரச்சினையில் பிரதமர் நரேந்திர மோடி முதலமைச்சர்களுடன் மெய்நிகர் உரை யாடல் ஒருதலைப்பட்சமானது மற்றும் தவறானது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா கண்டனம்.
தி டெலிகிராப்:
* மாநில அரசின் தீர்மானத்துக்கு எதிராக ஆளுநர் தனிப்பட்ட முடிவு எடுக்க அதிகாரம் இல்லை, என உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
* ராஜீவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனின் மன்னிப்பு மனுவை குடியரசுத் தலை வருக்கு அனுப்பிய தமிழ்நாடு ஆளுநரின் முடிவின் அரசமைப்பு உரிமையை உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது, இதுபோன்ற நடவடிக்கை நாட்டின் கூட்டாட்சிக் கட்டமைப்பின் வேர்களை தாக்குகிறது என கண்டனம் தெரிவித்துள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் தனது அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகளில் "வந்தே மாதரம்" மற்றும் தேசிய கீதத்துடன் கூடுதலாக "தமிழ்த் தாய் வாழ்த்து" பாடலை இசைக்கலாம் என்று ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
* வகுப்புவாத விஷத்தை பரப்பி சமூகத்தை குழிபறிக்கும் கரையான் ஆர்எஸ்எஸ் என ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் தோதாஸ்ரா சாடல்.
* இந்தியாவில் ஆளுநரின் பதவி தேர்ந் தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு எதிராக பயன் படுத்தப்படுகிறது என்கிறார். தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment