பெங்களூரு, ஏப்.4- பாஜக ஆளும் கருநாடக மாநி லத்தில், முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. விஎச்பி, பஜ்ரங் தளம் ஆகிய இந்துத்துவா கும் பல்கள் நடத்தும் இந்த தாக்குதலில், அரசாங்க மும் கை கோர்த்து செயல் பட்டு வருகிறது.
முஸ்லிம் மாணவியர் ஹிஜாப் அணி வதற்கு அரசாங்கமே தலையிட்டு தடை விதித்தது. கோயில் திருவிழாக்களில் முஸ் லிம் வியாபாரிகள் கடை போடக் கூடாது என்ற மிரட்டலையும் கண்டும் காணாமல் சென்றது. தற் போது ஹலால் இறைச் சிப் பிரச்சினையிலும் பஜ்ரங் தளத்திற்கு ஆதரவா கவே நிலை எடுத்துள்ளது.
ஹலால் இறைச்சியை விற்பனை செய்யக்கூடாது என்று பஜ்ரங் தளம் மிரட்டல் விடுத்து வரும் நிலையில், கறிக்கடை களில் கால்நடைகள் முறையாக வெட்டப்படு கிறதா? என்பதை ஆய்வு செய்யுமாறு மாநில பாஜக அரசும், தன்பங் கிற்கு அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டிருக்கி றது. இதனால் ஊக்கம் பெற்ற பஜ்ரங் தளம் கூட்டத்தினர், இஸ்லாமி யர்கள் நடத்தி வரும் கடைகளில் இந்துக்கள் ஹலால் இறைச்சிகளை வாங்க வேண்டாம் என துண்டறிக்கை வெளி யிட்டு பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். உகாதி பண்டிகைக்கு மறுநாள், அசைவம் சாப்பிடும் இந்துக்கள் கடவுளுக்கு இறைச்சியைப் படையல் செய்து புத்தாண்டைக் கொண்டாடுவார்கள். இதனை மனத்தில் வைத் துத்தான் பஜ்ரங் தளத்தி னர் துண்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மேலும், துண்டறிக் கையை வீதி வீதியாகச் சென்று விநியோகம் செய்த அவர் கள், 2 இடங் களில் முஸ்லிம் இறைச்சி வியாபாரிகளைக் கடுமை யாகத் தாக்கி யும் துன்பு றுத்தியுள்ளனர். சிவ மோகா மாவட்டம், பத் ராவதியில் முஸ்லிம் இறைச்சி விற்பனையா ளர் ஒருவரைத் தாக்கிய அவர்கள், ஹொச மானே பகுதியில் தவுசிப் என்ற முஸ்லிம் வியாபாரியைத் தாக்கியுள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக, பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த 5 பேர் மீது காவல்துறையினர் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர் என் பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment