நாமக்கல், ஏப். 1- நாமக்கல் மாவட்ட கழக சார்பாக திராவிடர் கழகத் தினுடைய தலைவர் ஆசிரியர் அவர்களுடைய சுற்றுப்பயண கூட்டம் சிறப்பாக நடத்துவது சம்பந்தமாக பொத்தனூர் அய்யா க.சண்முகம் தலைமையில் கலந் துரையாடல் கூட்டம் நடை பெற்றது.
சிறப்பாக நடைபெற வேண்டும் என்று அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம் உரையாற்றி னார். கழக பொதுச் செயலாளர் ஜெயக்குமார் சிறப்புரையாற்றி னார். நடைபெற்ற கலந்துரையா டல் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களை, நாமக்கல் மாவட்ட பக தலைவர் வழக் குரைஞர் இளங்கோ வாசித்தார்.
பொத்தனூர் க.சண்முகம், மாவட்ட தலைவர் குமார், மாவட்ட செயலாளர் வழக்குரை ஞர் பெரியசாமி பக மாவட்ட தலைவர் வழக்குரைஞர் இளங்கோ மாவட்ட துணைத் தலைவர் வேலூர் அசேன் மாவட்டத் துணைச் செயலாளர் க பொன்னுசாமி பக தலைவர் வீர முருகன் பக செய லாளர் அறிவாயுதம், அன்பு மணி, பழனிச்சாமி, குமாரபாளையம் சரவணன், வெண்ணந்தூர் செல்வ குமார் பள்ளிபாளையம் சீனி வாசன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் குமாரபாளையம் சார்பாக நகர தலைவர் சரவணன் ரூபாய் 5000 வழங்குவதாக கூறி ரூ2000 கொடுத்தார்.
பள்ளிபாளையம் சீனிவாசன் ரூபாய் 3 ஆயிரம் கொடுப்பதாக கூறி 1000 ரூபாய் கொடுத்தார் நாமக்கல் வழக்குரைஞர் பெரிய சாமி ரூபாய் 1000 கொடுத்தார் இறுதியில் சரவணன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment