சென்னை,ஏப்.29- தமிழ்நாடு சட்டப்பேரவையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்ற போது பல்வேறு கேள்விகளுக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பதிலுரை அளித்தார்.
அவர் கூறியதாவது:- “அலுவலகங்களில் பணியாற்றும் பொது மக்களின் வசதிக்காக விடுமுறை நாட்களான சனிக்கிழமையும் சார்-பதிவாளர் அலுவலகம் செயல் படும். பதிவுத் துறையில் ஆவண எழுத்தர் உரிமங்கள் புதிதாக வழங்கப்படும். வணிக வரி மற்றும் பதிவுத்துறைகள் அரசுக்கு வருவாய் ஈட்டுவதில் மிக முக்கிய பங்காற்றி வருகின்றன. கடந்த ஆண்டுகளை விட வணிக வரித் துறையில் வருவாய் அதிகரித்துள்ளது.
“எனது விலைப் பட்டியல் எனது உரிமை" என்ற திட்டம் செயல்படுத்தப்படும். வரி ஏய்ப்பை கண்டுபிடிக்க தேசிய தகவல் மய்யம் உருவாக்கியுள்ள ஜிஎஸ்டி மென்பொருள் வாங்கி பயன்படுத்தப்படும். திருமணச் சான்றிதழில் திருத்தம் செய்ய இணைய வழியாக விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப் படும்” என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment