ஜெய்ப்பூர், ஏப். 4- ராஜஸ்தானில் பெண் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வில், அம்மாநில பாஜக மூத்தத் தலைவர் சிக்கியுள்ளார். காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம், தவுசா மாவட்டம் லால்சோட் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் அர்ச்சனா சர்மா. இவர் தனது கணவருடன் சேர்ந்து அதே பகுதியில் மருத்துவமனை நடத்தி வந் தார். அர்ச்சனா மகப்பேறு மருத்துவ ராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், அர்ச்சனா நடத்தும் மருத்துவ மனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி ஒருவர், அதிக குருதிப் போக்கு காரணமாக பிரச வத்தின்போது உயிரிழந்துள்ளார். ஆனால், மருத்துவரின் தவறான சிகிச்சை காரணமாகவே கர்ப்பிணி உயிரிழந்த தாகவும், மருத்துவர் அர்ச்ச னாவை கைது செய்ய வேண்டும் என் றும் வலியுறுத்தி உறவினர்கள் போராட் டம் நடத்தினர். இதையடுத்து மருத்துவர் அர்ச்சனா மீது லால்சோட் காவல் நிலை யத்தில் சட்டப்பிரிவு 302-இன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்தனர்.
இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான மருத்துவர் அர்ச்சனா மருத்துவமனையின் மேல்மாடியில் உள்ள தனது வீட் டில் 29.3.2022 அன்று தற்கொலை செய்து கொண் டார். “என் கணவர் மற்றும் குழந்தை களை மிகவும் நேசிக்கிறேன். தயவு செய்து என் மரணத்திற்கு பிறகு என் கணவர் மற்றும் குழந்தைகளை தொந் தரவு செய்யாதீர்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை, யாரையும் கொலை செய்யவில்லை. என் மரணம் நான் குற் றமற்றவள் என்பதை நிரூபிக்கலாம். அப்பாவி மருத்துவர்களை துன்பு றுத்தாதீர் கள்” என்று கடிதம் ஒன்றை யும் மருத்துவர் அர்ச்சனா எழுதி யிருந்தார்.
இதனிடையே உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராடியதற்கும், மருத்துவமனைக்கும், மருத் துவர்களுக்கும் பெரும் அழுத் தத்தைக் கொடுத்ததற்கும், ராஜஸ்தான் மாநில மேனாள் அமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான ஜிதேந்திர கோத்வால்-தான் காரணம் என்பது காவல்துறை விசாரணை யில் தெரியவந் துள்ளது. இதையடுத்து பாஜக தலைவர் ஜிதேந்திர கோத்வால் மீது சட்டப் பிரிவு 306-இன் கீழ் (தற் கொலைக்கு தூண்டுதல்) வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர்.
No comments:
Post a Comment