மதுரை, ஏப்.8 திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொண்டுள்ள நீட் தேர்வு எதிர்ப்பு, தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட தமிழ்நாடு காங் கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:-
தேர்தல் அரசியல் வேறு -லட்சிய அரசியல், கொள்கை அரசியல் வேறு என்பது உண்மை தான். அய்யா அவர்கள் நீண்ட காலமாக எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தொண்டாற்றி வருகிறார். தமிழ்நாட்டின் அரசியலை இன் றைக்கு வட மாநிலங்களில் உற்றுப் பார்க் கிறார்கள். காங்கிரசை ஆட்சியில் அமர்த்த அப்போதே தி.மு.க. தலைவர் பறைசாற்றினார்.
தமிழ்நாட்டில் ஒரு கொள்கை அரசியலை ஏற்படுத்த ஏராளமான கட்சிகள் நம்மோடு இருக்கிறார்கள். திராவிடர் கழகம் கடவுள் மறுப்பு இயக்கம். காங்கிரஸ் கடவுள் நம்பிக் கையை ஏற்கும் கட்சி. பொதுவுடைமை இயக்கமோ விடுதலைக்கான கட்சி. இப்படி வேறுபட்ட நோக்கங்களை கொண்டவர்கள் ஒன்றாக நிற்கிறோம் என்றால் மதச்சார்பற்ற அரசை அமைப்பதற்காக ஒன்று சேர்ந்து நிற்கிறோம்.
மாநிலத்தின் நலன் கருதி ஒன்றிய அரசோடு இணக்கமாக இருப்பது தேவையான ஒன்று தான். அதற்காக ஒன்றிய அரசின் அனைத்து திட்டங்களையும் ஏற்க வேண்டும் என்ற அவ சியமில்லை. நமது முதலமைச்சர் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றி உள்ளார்.
ஒன்றிய அரசை எதிர்த்து தமிழ்நாட்டில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள் ளார் நமது முதலமைச்சர். இன்றைக்கு நாம் நீட் தேர்விற்கு எதிராக ஒரு போராட்டத்தை கையில் எடுத்திருக்கிறோம் என்றால் இது ஏதோ இந்திக்கும், தமிழுக்கும் இடையேயான போராட்டம் அல்ல. பா.ஜ.க.வுக்கும், திராவிட இயக்கத்திற்கும் இடையிலான போராட்டம் அல்ல .
சில மாநிலங்கள் நீட் தேர்வுக்கு ஆதரவாக இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் அங்கெல்லாம் சி.பி.எஸ்.சி.பள்ளிகள் அதிகம். எனவே, ஆதரிக்கிறார்கள். ஆனால் தமிழ் நாட்டில் அப்படியில்லை இங்கே உள்ள பாடத்திட்டம் மாநில அரசின் கல்வித்திட்டம். எனவே நாம் எதிர்க்கிறோம்.
மதுரைக்கு ஓராண்டுக்கு முன்பு வந்த எங்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் நீட் தேர்வை விரும்பாத மாநிலங்கள் அதிலிருந்து விலக்கு பெறலாம் என்றுதான் சொல்லியுள்ளார்.
அதை ரத்து செய்ய சட்டமன்றத்தில் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி யுள்ளார். ஆனால் ஆளுநரோ அதைப்பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாமல் குடியரசுத்தலை வருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருவது நல்லதல்ல. ஒரு ஆளுநர் அந்தந்த மாநில மக்களின் உணர்வுகளை புரிந்தவராக இருக்க வேண்டும். ஆனால் மாறாக நம்மை, நமது உணர்வுகளை புறக்கணிக்கிறார். அது தவறு.
ஆசிரியரின் உடல்நிலை உள்ள நிலையில் அவரது வயதுக்கு இந்த பயணம் என்பது சாதாரணமானது இல்லை. அய்யா அவர்களை ஒருமுறை சந்தித்தபோது அவர் கையில் இருந்த அரசமைப்பு சட்ட புத்தகத்தில் குறிப் பெடுக்க கோடு ஒன்று கிழித்தார். அதுவும் சற்றும் பிசிறில்லாமல் நேராக கிழித்தார்.(சிரிப்பலை). அதில் அவரது மனவலிமையை உறுதியை பார்த்தேன்.
நானும் பல்வேறு பணிச்சூழலில் இருந் தாலும் அய்யா அவர்களின் அழைப்பை ஏற்று ஓடோடி வந்திருக்கிறேன். ஏனென்றால் அவர் எங்களிடம் வைத்துள்ள உரிமையின் காரண மாக வந்திருக்கிறேன்.
அவரது இந்த நீண்ட நெடிய பயணம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அவரது இந்த போராட்டம் வெற்றி பெற வேண்டும். நாமும் அதற்கு துணை நிற்போம் என்று கூறி விடைபெறுகிறேன்.
No comments:
Post a Comment