சென்னை, ஏப். 27- தமிழ்நாடு சட்ட சபையில் துணைவேந்தர்கள் தேர்வு குறித்த சட்ட மசோதா நிறைவேற் றப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
வைகோ
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக் கையில், 'கல்வித் துறையில் மாநில உரிமையை முற்றாக பறிக்கும் நோக்கத்தில், தேசியக்கல்வி கொள் கையை பா.ஜ.க, அரசு செயல்படுத்த முனைந்துள்ள நேரத்தில், தி.மு.க. அரசு இத்தகைய சட்ட முன் வரைவை கொண்டுவந்து இருப்பது வரவேற்கத்தக்கது. தமிழ்நாடு சட் டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள இச்சட்ட முன்வரைவு மூலம், கல் வித்துறையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசின் உரிமையை நிலைநாட்டி இருப்பது பாராட்டுக்கு உரியது' என்று கூறியுள்ளார்.
இரா.முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தர சன் விடுத்துள்ள அறிக்கையில், அரசமைப்பு அதிகாரத்தின்படி, மாநிலத்தில் மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சியின் ஆலோசனைப்படி தான் ஆளுநர் செயல்பட வேண் டும். ஆனால், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு மக்கள் பிரதிநிதிகள் ஆட்சிக்கு போட்டியாக அமைந்துள்ளது.
சட்டமன்றப் பேரவை ஒரு மனதாக நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பும் மசோதாக் களை கிடப்பில் போட்டு, அரசின் செயல்பாட்டில் இடையூறு செய் யும் வகையில் செயல்பட்டு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, நீட் தேர்வு முறையில் இருந்து தமிழ் நாட்டிற்கு விலக்குக் கோரும் தமிழ் நாடு அரசின் முயற்சிகளை தடுத்து, அதனை நிராகரித்து விட்டு நேரடி யாக செயல்படுத்தும் முயற்சியில் ஆளுநர் துணை வேந்தர்கள் மாநாடு நடத்துவது அப்பட்டமான அதிகார அத்துமீறலாகும். இதே வழிமுறையில், தமிழ்நாடு ஒரு முகமாக நின்று, எதிர்த்து வரும் “தேசிய கல்விக் கொள்கையை” உயர்கல்வித் துறையில் அமலாக்க முயற்சிப்பது மக்களாட்சி கோட் பாட்டுக்கு எதிரானதாகும். ஆளு நர் அதிகார வரம்பின் எல்லை தாண்டி, கட்சி அரசியல் நடவடிக் கைகளில் ஈடுபடுவதை இனியும் அனுமதிக்க முடியாது என்ற நிலையில் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழ்நாடு அரசுக்கு வழங்கும் மசோதாவை சட்டப் பேரவையில் அறிமுகப்படுத்தி, ஒரு மனதாக நிறைவேற்றி இருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது. சட்டப் பேரவை நிறைவேற்றிய துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான மசோதா விற்கு ஆளுநர் உடனடியாக ஒப்பு தல் வழங்க வேண்டும் என வலி யுறுத்துகிறது.
-இவ்வாறு இரா.முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.
கே.பாலகிருஷ்ணன்
இந்திய கம்யூனிஸ்ட் மார்க் சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,
பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர் நியமனத்தை ஆளுநர் மேற்கொள்ளும் முறையை மாற்றி, தமிழ்நாடு அரசே அந்த நியமனங் களை மேற்கொள்ளும் என்ற மசோதா சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கத்தின் அதிகாரத்தில், ஆளுநர் தலையீடு செய்யும் போக்கு, அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. ஆளுநர் என்பவர் ஒன்றிய அரசு மற்றும் ஆளும் கட்சியின் முகவராகவே செயல்படு கிறார். அதனால், சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களையும், சட்டத் திருத்தங்களையும் நிறுத்தி வைப் பது, முடக்குவது, மாநில அரசைப் புறக்கணித்து உயர்கல்வி நிறுவனங் களில் தலையிடுவது போன்ற அத் துமீறல்களை வெளிப்படையாகவே மேற்கொள்கிறார். இப்போது கூட, அரசின் இசைவில்லாமலேயே துணை வேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் கூட்டியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன் தென் மாநில துணைவேந்தர்கள் மாநாட் டில் பேசும்போது, ஆளுநர் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை வலியு றுத்தி அதற்காகக் கண்டனத்திற்கு ஆளானார்.
எனவே தமிழ்நாடு அரசு, மாநில உரிமையை வற்புறுத்தும் வகையிலும், உயர்கல்வி நிறுவனங் களை பாதுகாக்கும் நோக்கத்துட னும் கொண்டு வந்திருக்கும் சட்ட மசோதாவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற் குழு வரவேற்கிறது.
இந்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சட்ட மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளார்கள். குஜராத் உள் ளிட்டு பல மாநிலங்களில் இந்த சட்டம் நடைமுறையில் இருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் உரி மைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலைபாடே பாஜக-வின் அணுகு முறையில் வெளிப்படுகிறது. அதனை வழிமொழியும் விதத்தில் அதிமுகவும் வெளிநடப்பு செய்து உள்ளது ஏற்கத்தக்கதல்ல. அரசி யல் சுயநலத்திற்காக, மாநில உரி மைகளைக் கைவிடுகின்ற சந்தர்ப்ப வாத போக்கு கண்டனத்திற்குரியது.
பல்கலைக்கழங்களின் வேந்த ராக ஆளுநர் நீடிக்கக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க் சிஸ்ட்) உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளன.
மேலும், பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் செயல்படும் நிலைமை தொடருமானால் அது உயர்கல்வித்துறையில் தலையீடு கள் தொடர்வதற்கே வழிவகுக்கும். எனவே, பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் செயல்படும் ஏற்பாட்டையும் மாற்றியமைத்திட வேண்டும் என்று இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
இரா.அதியமான்
ஆதித்தமிழர் பேரவை நிறு வனர் தலைவர் இரா.அதியமான் அறிக்கையில்,
தமிழ்நாட்டின் உயர் கல்வித் துறையில் குழப்பத்தை ஏற்படுத்து கின்ற தமிழக ஆளுநரின் செயல் பாடுகளை தடுத்து நிறுத்துகின்ற வகையில் பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தர் களை தமிழ் நாடு அரசே நியமிக்கிற சட்ட திருத்த மசோதா தமிழக சட்ட மன்றத்தில் மாண்புமிகு முதலமைச் சர் அவர்களால் முன்மொழிந்து ஒருமனதாக நிறைவேற்றி இருப் பதை ஆதித்தமிழர் பேரவை மிக மகிழ்வோடு வரவேற்கிறது, இது தமிழ்நாடு உயர்கல்வித் துறையில் மிகப்பெரிய மாற்றங்களை சாத னைகளை உருவாக்க வழிவகுக்கும், அதேசமயம் பாரதிய ஜனதா கட்சி யுடன் இணைந்து மசோதாவை எதிர்த்த அதிமுகவையும் ஆதித் தமிழர் பேரவை வன்மையாக கண் டிக்கிறது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment